முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் அன்னதான மண்டபத்தை வரும் 7-ம் தேதி பிரதீபா திறந்து வைக்கிறார்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

திருப்பதி,ஜூலை.- 5 - திருப்பதியில் பக்தர்களுக்காக புதியதாக கட்டப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தை ஜனாதிபதி பிரதீபா பாட்டில் வரும் 7-ம் தேதி திறந்துவைக்கிறார். இதனையொட்டி அவர் 6-ம் தேதியே திருப்பதி கோயிலுக்கு வந்துவிடுகிறார். உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை கோயில் நிர்வாகம் சிறப்பாக நடத்தி வருகிறது. பக்தர்கள் ஏராளமாக இருப்பதால் தற்போது இருக்கும் அன்னதான மண்டபம் போதுமானதாக இல்லை. அதனால் பெரிய அளவில் தற்போது அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வருகின்ற 7-ம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக அவர் 6-ம் தேதி இரவே திருப்பதி வந்துவிடுகிறார். அன்று இரவு அங்கேய தங்கி கோயிலில் வழிபடுகிறார். அதனையடுத்து மிகப்பெரிய அளவில் புதியதாக கட்டப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தை திறந்துவைக்கிறார். அன்றைய தினம் பிரதீபா பாட்டீலூக்கு திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழாவில் ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் திருப்பதி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோயில் மற்றும் மலைப்பாதை நெடுகிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்