பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவு ஜெயலலிதா இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      தமிழகம்
jaya 0

சென்னை, ஜூலை.- 10 - சிவகங்கை- ராமநாதபுரம்- பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவிற்கு
முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் பி.சுப்பிரமணியன், பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம, கவரப்பாளையம் ஊராட்சி செயலாளர் சா.மணிக்கண்ணன், ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி 9-வது வார்டு செயலாளர் க.கோவிந்தராஜன் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டும், திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றிய விவசாயப் பிரிவு துணைத்தலைவரும், மாறங்குடி கிளை செயலாளருமான பி.சிவசாமி அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்பு சகோதரர்கள் சுப்பிரமணியன், மணிக்கண்ணன், கோவிந்தராஜன் மற்றும் சிவசாமி ஆகியோரை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: