முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவை மாற்றம்: பிரதமருடன் சோனியா பேச்சு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை12 - மத்திய மந்திரி சபை மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நான்காவது முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியதை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இப்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக கபில்சிபல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து மம்தா பானர்ஜி தனது மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்ததாக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறனும் தனது ஜவுளித் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா  செய்தார். இதையடுத்து மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்அமைச்சரவை மாற்றம் எதுவும் டக்கவில்லை.

அமைச்சரவை மாற்றம் குறித்து ஏற்கனவே  மூன்று முறை பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நான்காவது முறையாக பிரதமருடன் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சரவை மாற்றம் எப்போது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அமைச்சரவையில் அதிகமான மாற்றங்கள் இருக்கலாம் என்று ஹேஷ்யங்கள் தெரிவிக்கின்றன.

புது முகங்கள் உள்பட 10 அல்லது 12 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  சிலருக்கு அமைச்சர் பதவிகள் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லோக் சபையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின்  தலைமை கொறடாவாக இருக்கும் சுதீப் பந்தோபாத்யாயா அமைச்சராக்கப்படலாம் என்றும் அவருக்கு நிதித்துறையில் வருவாய் துறை பொறுப்பு கொடுக்கப்படலாம் என்றும்  கூறப்படுகிறது.

தற்போது நிதித்துறையில் இணை அமைச்சராக இருக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த பழனிமாணிக்கம் கேபினட் அந்தஸ்திற்கு உயர்த்தப்படலாம் என்றும் அனுமானங்கள் கூறுகின்றன.

தான் வகித்து வந்த ரயில்வே துறையை தனது கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான  தினேஷ் திரிவேதிக்கு கொடுக்க மத்திய அரசை மம்தா பேனர்ஜி வலியுறுத்தியுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

புதிய அமைச்சர் பதவிக்கு தி.மு.க. தரப்பில் யாரையும் சிபாரிசு செய்வதில்லை என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் 2 ஜி வழக்கில் ஏற்கனவே ஆ.ராசாவும் கருணாநிதியின் மகள் கனிமொழியும் திகார் சிறையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் யாரையும் அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கும் திட்டம் தி.மு.க.வில் இல்லை என்றும் அனுமானங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சரவை மாற்றம் எந்த நேரமும் நடக்கலாம் என்று விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.அதனால் டெல்லியில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை காணப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்