முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிதியுதவி

புதன்கிழமை, 13 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.13 - பொள்ளாச்சி அருகே யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோயம்பத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், வேட்டைக்காலன் புதூர் கிராமம், டாப்சிலீப் எருமைப்பாறைப் பகுதியில் ரவி என்பவரின் மகன் திலீப்குமார் 10-7-2011 அன்று முகாமில் உள்ள யானை தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன்.

திலீப்குமார் என்பவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony