எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கு சனிக்கிழமை முதல் நேரடியாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் 7-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக சென்று கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள விவிஜிஆர் நகர் மற்றும் சிவலிங்க ஆசாரியார் தெருவில் வசிக்கும் நெரிசலில் சிக்கி காயமடைந்த உஷா மற்றும் அவரது தாய் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


