முக்கிய செய்திகள்

முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் இந்தியாதான்: கட்காரி

Image Unavailable

 

புதுடெல்லி. ஜூலை. 20 - முதலீடுகளை செய்வதற்கு உலகில் மிகச்சிறந்த நாடுகளில் இநதியாவும் ஒன்று என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி கூறினார். டெல்லியில் இந்திய - பிரிட்டன்  அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் மற்றும் இந்திய - ஐரோப்பிய வர்த்தக பேரவை ஆகியவற்றின் சார்பில் நடந்த கூட்டு கூட்டத்தில் பா.ஜ.க.தலைவர் நிதின் கட்காரி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில் 

வாஜ்பாய் தலைமையில் மத்தியில் தேசிய  ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்த போது சர்வதேச வர்த்தகம்,. வெளிநாட்டு முதலீடுகள், பங்கு விலக்கல், தொலை தொடர்பு, மின்சாரம், சாலைகள், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன என்றார்.

இந்தியாவில் வளர்ச்சி திட்ட பணிகள் வேகமாக  வளர்ச்சி கண்டு வருகின்றன. இளைய  தலைமுறையினர் ஏராலமான அளவில் இருக்கின்றனர்.  தனி நபர் வருமானம் அதிகரித்து வருகிறது. உள்நாட்டு சந்தை மகத்தான சந்தையாக இருக்கிறது. என்வே உலகில் முதலீடுகள்  செய்வதற்கு சிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கி வருகிறது என்றும் அவர்  கூறினார்.

எனவே இநதியாவம் ஐரோப்பியாவும் ஆராய்ச்சி, மற்றும் அபிவிருத்தி, அறிவியல் தொழில்நுட்பம், நவீன தயாரிப்பு முறைகள், பசுமை தொழில்நுட்பம், மரபு சாரா எரிசக்தி, திறன் வலர்ச்சி, கல்வி உள்ளிட்ட பல் ரேறு முக்கிய துறைகளில்  இந்தியாவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும்  வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பா.ஜ.க. ஆட்சி செய்யம் மாநிலங்களில் முதலீஈடு  செய்வதற்கான வாய்ப்புக்களும் துறைகளும் ஏராளமாக இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தின் இரு  சபைகளிலும் உள்ள உறுப்பினர்களில் பெரும்பாலும் இந்திய வம்சாவளியை  சேரந்தவர்களும் நிறை பேர் இருக்கிறார்கள். என்வே ஐரோப்பிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாஏவில் அதிகமான முதலீடுகளை செய்வதற்கு முன் வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் ஐரோப்பியாவும் ஒத்துழைப்பு நல்கி தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: