முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு உதவியை நாடும் மும்பை போலீசார்

புதன்கிழமை, 20 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஜூலை.20 - மும்பை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை தொடர்பாக கண்காணிப்பு கேமிராக்களின் முக்கியமான பதிவுகளை துல்லியமாக காண வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். அதன் மூலம் குண்டுவெடிப்பு நடந்த ஒரு பகுதியில் சம்பவ நேரத்தில் இருந்த ஒருவரை அடையாளம் காண போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். குண்டுவெடிப்பு நடந்த மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் உள்ள பதிவுகள் வாயிலாக பல முக்கிய அம்சங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. ஆனால் அவற்றில் பல பதிவுகள் தெளிவாக இல்லை. எனவே இது குறித்து அயல்நாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியை நாடியிருக்கிறோம் என்று மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையில் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்வதற்காக நாடு தழுவிய அளவிலான தேடுதல் வேட்டையில் மகராஷ்டிரா போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் இவ்வழக்கு விசாரணையை தொடர்ந்து உயிரிழந்த பியாஸ் உஸ்மானியின் மரணம் குறித்தும் புலனாய்வு பிரிவினர் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என கருதப்படும் ஒருவரின் சகோதரரான பியாஸ் உஸ்மானி என்ற அந்த நபர், போலீசாரின் சித்திரவதை காரணமாகவே உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். 

எனினும் உஸ்மானியின் மரணம் இயற்கையானதாகவே தெரிகிறது என்று அவரது சடலத்தை பரிசோதனை செய்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்