முக்கிய செய்திகள்

ராகுல் குறித்த கத்ரீனாவின் கருத்துக்கு காங். கண்டனம்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.21 - ராகுல் காந்தி குறித்து நடிகை கத்ரீனா கைப் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் த்ரிவித்துள்ளது.  இந்தி நடிகை கத்ரீனா கைப் ஒரு பேட்டியில் கூறும் போது, சிலர் என்னை பாதி இந்தியர், பாதி பிரிட்டிஷ் காரி என்று விமர்சிக்கிறார்கள். எனது தந்தை ஒரு இந்தியர். தாய் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பதற்காக எனஅனை அவ்வாறு அழைக்கிறார்கள். இதற்காக நான் வெட்கப்படவில்லை. ராகுல் காந்தியை எடுத்துக்கொண்டால் அவர் பாதி இந்தியராகவும், பாதி இத்தாலி காரராகவும் உள்ளார். இதுபோன்று இந்தியாவில் நிறையபேர் உள்ளனர். இவ்வாறு இருப்பதற்கு நாங்கள் ஏன் வெட்கப்படவேண்டும் என்று கூறியிருந்தார். ராகுல்காந்தி குறித்து கதிரீனா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், இந்திய நாட்டின் அரசியலுக்காக கத்ரீனா என்ன செய்துள்ளார். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் குறித்து தேவையில்லாத விமர்சனங்களை கூறி பிரச்சனை யாரும் கிளப்ப வேண்டாம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: