பழனியில் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      ஆன்மிகம்
mari

 

பழனி, மார்ச்.- 3 - பழனியில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பழனி முருகன் கோவிலின் உபகோயிலான மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 11ம் தேதி முகூர்த்த கால் நாட்டுதலுடன் விழா தொடங்கியது. பிப்ரவரி 22ம் தேதி மாரியம்மன் திருக்கல்யாணமும் மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அன்று இரவு 3 மணிக்கு அம்மன் கம்ரட்சனை பூஜையும் அம்மன் கொலுவிருத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

தேரோட்டத்தையொட்டி காலை 9 மணிக்கு தீர்த்தம் வழங்குதலும் பகல் 2 மணிக்கு திருக்கண் நிகழ்ச்சியும் வையாபுரி கண்மாயில் உள்ள பாதிரி பிள்ளையார் கோவிலில் உற்சவ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், குருக்கள் அமிர்தலிங்கத்தால் சிறப்பாக செய்யப்பட்டது. பின்னர் 3 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் செய்தார். 4.30 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவக்கப்பட்டு 4ரத வீதி வழியாக வலம் வந்து நிலைகொண்டது. 

இவ்விழாவில் பழனி கோவில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம், துணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் நடராஜன், பேஷ்கார் ராமலிங்கம், மணியம் சேகர், நகராட்சி ஆணையர் மூர்த்தி, சித்தனாதன் சன்ஸ் தனசேகர், செந்தில் குமார், கந்த விலாஸ் செல்வகுமார், பெரியநாயகி டிரஸ்ட் சுந்தரம், வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவர் மூர்த்தி, ரத்தினம், தேரடி பாலு, மதனம் செல்வராஜ், குமார், சங்கு சந்திரன், கவுன்சிலர்கள் சுரேஷ், மகேஸ்வரி சக்திவேல், பத்மினி முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: