முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழங்கால இந்திய சம்பவங்களை நிரூபிக்க விஞ்ஞானிகள் முயற்சிக்கு கலாம் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 31 - பழங்கால இந்தியாவில் நடந்த சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் உண்மையான என்பதை அறியை விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அப்துல்கலாம் வரவேற்றுள்ளார்.
கி.மு. 2000-ம் ஆண்டிற்கு முன்பு பழங்கால இந்தியாவில் நடந்த சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் என்ற தலைப்பில் நேற்று தேசிய கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. இந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் கலந்துகொண்டு சம்பவங்கங்கள் நடந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கும் வகையில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர். இந்த கருத்தரங்கில் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- பழங்கால இந்தியாவில் நடந்த சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் நிரூபிக்கும் விஞ்ஞானிகளின் முயற்சியை நான் வரவேற்கிறேன். இந்தியாவிலேயே இயற்கையாக உருவாகிய நாகரீகத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதை நிரூபிக்க முயற்சி செய்வது நாட்டின் மீது உலகம் முழுவதும் நம்பிக்கையை ஊக்குவிக்கும். நான் பிறந்த ரமேஸ்வரத்திற்கும் ராமாயாணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ராமாயாண சம்பவத்தை நிரூபிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ராமேஸ்வரம் நகரம் முழுவதும் நான் சென்று பார்த்துள்ளேன். இந்த நகரில் இருந்து எனக்கு சில குழப்பமான தகவல்கள் கிடைத்துள்ளன. ராமேஸ்வரம் பகுதியில் உள்ள காந்தமனபர்வதத்தில் இருந்துதான் இலங்கையை ராமன் பார்த்திருக்க வேண்டும் என்று என் கண்ணுக்கு தெரிகிறது. அதேசமயத்தில் என் முன்னிலையில் கோதண்ட ராமர் கோயிலும் தெரிகிறது. ராமநாதசுவாமி கோயிலில் சிவ லிங்கத்தை நான் கண்டுள்ளோம். அதை ராமர் வழிபட்டிருக்கிறார். இதுதான் இங்கே முக்கிய விஷயமாகும் ராவணன் குறித்தும் விஞ்ஞான பூர்வமாக தகவல்களை அறிவதில் நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன். மேலும் இலங்கை மீது படையெடுக்கும் முன்னர், ராமர், லட்சுமணன், சுக்கீரவன்,அனுமான் ஆகியோர் எங்கு போர்த்தளம் அமைத்தார்கள் என்பதை அறிய வேண்டும். வேதகாலத்தில் நடந்த விவசாய முறையானது தற்போதுள்ள விவசாயத்திற்கு மிகவும் உதவியாகும் ஒத்ததாகவும் இருக்கிறது. இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்