முக்கிய செய்திகள்

சர்வர் வேலைக்கு கூட நான் தகுதியில்லை: பாக்கியராஜ்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.2 - ஹோட்டலில் சர்வர் வேலைக்குகூட நான் தகுதியில்லை என்பதை புரிந்துக்கொண்டேன் என்று நடிகர் பாக்கியராஜ் கூறினார். நேற்று சென்னையில் யுவன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நடைப்பெற்றது. நடிகர் பாக்கியராஜ் வெளியிட இயக்குநர் பிரபு சாலேமன் பெற்றுக்கொண்டார். படஅதிபர் தனசெயன், நடிகர் ராகுல், பிரம்பிலா ஜெகதீஷ் மற்றும் படத்தின் கதாநாயகன்,  இசைமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடல் ஆசிரியர் விவேகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

விழாவில் பரதநாட்டியமும், மேற்கத்திய நடன நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. விழாவில் நடிகர் பாக்கியராஜ் பேசும்போது, இங்கு இளைஞர்களுக்கு பாடம் செல்லும் ஒருபடமாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் படத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் சரவணன் என்னிடம் உதவியாளராக பணிபுரிந்தார் என்பதைவிட அவர் ஆரம்பத்தில் எனது அலுவலகத்தில் டீ, காப்பிதான் கொடுத்தார். ஆரம்பத்தில் படவாய்ப்பு தேடி வரும்போது ஐதாராபாத் சென்றேன். அங்கு சுற்றிவிட்டு விஜயவாடா வந்தபோது பசி மயக்கத்தில் இருந்தேன். அப்போது ஒரு ஹோட்டலில் வேலைகேட்டு சென்றேன். அந்த முதலாளி சாப்பாடு போட்டு, பணமும் கொடுத்து, ஊர் போய் சேறு, சர்வர் வேலையில் உன்னால் சரியாக பணிபுரிய முடியாது. அதற்கு ஞாபகம் அதிக வேண்டும். ஒரு பில்லை ஒருவரிடம் மாற்றி கொடுத்துவிட்டாலோ, அல்லது கேட்ட உணவை தராவிட்டாலும் மரியாதையில்லாமல் திட்டுவார்கள். அதனால் ஊருக்குபோய் வேறு வேலைபார் என்றார். எந்த வேலை பார்ப்பது என்பது முக்கியமல்ல, அந்த வேலைக்கு நாம் தகுதியானவரா என்று பார்க்கவேண்டும். அப்போதுதான் ஜெயிக்கமுடியும். இயக்குநராக ஆவதற்கு சரவணக்கு தகுதி உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: