முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிங்ஹாம் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

நாட்டிங்ஹாம், ஆக. 2 - இன்திய அணிக்கு எதிராக நாட்டிங்ஹாமில் நடைபெற்ற 2 -வது கிரிக் கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 319 ரன் வித்தியாசத்தி ல் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் அசைக்க முடியாத முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ரன் எடுத்தது. பிராட் 64 ரன்னும், ஸ்ட்ராஸ் 32 ரன்னு ம், பெல் 31 ரன்னும், பீட்டர்சன் 29 ரன்னும், ஸ்வான் 28 ரன்னும், எடு த்தனர். பிரவீன் குமார், இஷாந்த் , ஸ்ரீசாந்த் தலா 3 விக்கெட் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 288 ரன் எடுத்தது. டிரா விட் 117 ரன்னும், லக்ஷ்மண் 54 ரன்னும், யுரராஜ் சிங் 62 ரன்னும், எடு த்தனர். பிராட் 6 விக்கெட்டும், ஆண்டர்சன் மற்றும் பிரஸ்னன் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். 

முதல் இன்னிங்சில் கோட்டை விட்ட  இங்கிலாந்து அணி 2 - வது இன் னிங்சில் வெளுத்துக் கட்டியது. அந்த அணி 544 ரன்னைக் குவித்தது. பெல் 159 ரன்னும், பிரஸ்னன் 90 ரன்னும், பிரையர் 73 ரன்னும், மார்கன் 70 ரன்னும், பீட்டர்சன் 63 ரன்னும், பிராட் 44 ரன்னும் எடுத்தனர். 

இந்திய அணி 2 -வது இன்னிங்சில் 478 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இங்கிலாந்து வைத்தது. ஆனால் இந்திய அணி 158 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் இங்கிலாந்து 319 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. டெண்டுல்கர் 56 ரன்னும், ஹர்பஜன்சிங் 46 ரன்னும் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்