Idhayam Matrimony

காஞ்சி காமாட்சி அம்மனை தரிசிக்க வருகிறார் ரஜினிகாந்த்

சனிக்கிழமை, 6 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

காஞ்சி, ஆக.7 - உலகப் பிரசித்திபெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய இம்மாத இறுதியில் ரஜினிகாந்த் வரவிருக்கிறார். ரஜினிகாந்த் உடல்நலக் குறைவுகாரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் நாடு திரும்பினார். தற்போது அவர் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள  அவரது பண்ணை வீட்டில் ஓய்வுபெற்று வருகிறார். இதற்கிடையில் அவர் பரிபூரணமாக உடல்நலம் பெறவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கானோர் மொட்டை அடித்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஆடி மாத இறுதிக்குள் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரவிருக்கிறார். அம்பாளுக்கு பட்டுப் புடவை சார்த்தியபின்னர் அவர் அம்பாள் சன்னிதானத்தில் பயபக்தியுடன் தரிசனம் செய்கிறார். அம்பாளை தரிசித்த பிறகு கோவில் வளாகத்தில் உள்ள கால பைரவருக்கு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்துகொள்கிறார். அங்கு அவர் 108 வடைமாலை, மிளகு சாதம் ஆகியவற்றை காலபைரவருக்கு நைவேத்யம் செய்து சுவாமியை வணங்குகிறார். இந்த தகவலை கோவில் முக்கிய குருக்களில் ஒருவர் தெரிவித்தார்.  மேலும் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் மூலமாக காமாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே சண்டி ஹோமம் 2 நாட்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago