முக்கிய செய்திகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல் - பெகூராவின் ஜாமீன் தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.12 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அதிகாரி சித்தார்த்த பெகூராவின் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது உதவியாளர்களான சித்தார்த்த பெகூரா, சந்தோலியா, கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் முன்னாள் அதிகாரி சித்தார்த்த பெகூரா தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது ஐகோர்ட்டு நீதிபதி அஜித் பாரிகோஹி விசாரணை நடத்தினார். தொலைத் தொடர்பு துறை முறைகேட்டில் பெகூராவிற்கு தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் தெளிவாக இருக்கிறது. எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று நீதிபதி அஜித் பாரிகோஹி கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: