முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

`நீங்க நல்ல இருக்கனும் நாடு முன்னேற' ஜெயலலிதாவுக்கு சரத்குமார் வாழ்த்து

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 20 - புதிய தலைமை செயலக கட்டிடத்தை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஈடாக பல்துறை உயர் சிகிச்சை மையம் மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை பாராட்டிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற என்ற இதயக்கனி பட பாடல் வரிகளை பாடி ஜெயலலிதாவை பாராட்டினர்.   நேற்று சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் புதிய தலைமை செயலக கட்டிடத்தில் உள்ள `எ' பிளாக் கட்டிடத்தில் பொதுமக்கள் பயன் பெற பல்துறை உயர் சிகிச்சை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதை பாராட்டி சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சட்டமன்றத்தில் பேசியதாவது:-
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கட்டிடம் மருத்துவமனையாக மாற்றியதன் மூலம் ஜெயலலிதாவை மருத்துவராக பார்க்கிறேன். கட்டிடம் உபயோகிக்கப்படாமல் வீணடிக்கிறார்கள் என்று பலரும் பேசியதற்கு, முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பாக ஏதாவது செய்வார் என்று இருந்தபோது, முதல்வர் ஜெயலலிதா சிறந்த முறையில் டயகனைஸ் செய்துள்ளார். எதையும் தொலைநோக்கு பார்வையுடன் செய்யக் கூடியவர் முதல்வர் ஜெயலலிதா என்று நான் அடிக்கடி கூறுவேன்.
முதல்வர் ஜெயலலிதா எரிமலை போன்றவர். எரிமலை அமைதியாகத்தான் இருக்கும். திடீரென வெடிக்கும். முதல்வர் நல்ல எரிமலை. நன்மை செய்யக் கூடியவர். `நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற, இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற', ஏழை எளியோருக்கு எதை செய்ய வேண்டும் என்ற அவரின் எண்ணத்தை, சுகாதாரத்துறையில் மருத்துவமனை அமைத்ததை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு சரத்குமார் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago