முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதூர்த்தி விழா பொது இடங்களில் சிலைவைக்க போலீஸ் கட்டுப்பாடு

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

காஞ்சிபுரம், ஆக.- 29 - விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு நகரத்தில் 7 அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்கக்கூடாது. பொது இடங்களில் வைத்து வழிபடக் கூடாது என்று போலீஸ் அறிவித்துள்ளது. வருகிற 1ம் தேதி விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. செங்கல்பட்டு நகரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஓட்டேரி, பாலூர் உள்ளிட்ட பகுதியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான பொதுமக்கள்-போலீஸ் ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டில் நடந்தது. இதற்கு, ஏ.எஸ்.பி. பொன்னி தலைமை தாங்கினார்.
போலீஸ் தரப்பில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட போலீஸ் அனுமதி பெற வேண்டும். 7 அடி உயரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட சிலையாக இருக்க வேண்டும். சிலை வைக்க இரும்பு தகரத்தைக் கொண்டு கொட்டகை அமைக்க வேண்டும். அதில் தீயணைப்பு கருவியும் வைத்திருக்க வேண்டும்.
கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. விழாக் குழுவில் ஒருவர் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக சிலை அருகில் அமர்ந்திருக்க வேண்டும். விதிமுறை மீறி வைக்கப்படும் சிலைகள் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
விழாக்குழு சார்பில், சமூக விரோதிகள் தாக்கமால் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும். சட்டதிட்டம் என்ற பெயரில் வழிபாட்டுக்கு தடைவிதிக்கக் கூடாது. நீர்நிலைகளில் சிலையை கரைப்பதற்காக 4ம் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லும்போது உரிய போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர்கள் பழனி, குமரன், லட்சுமிநாராயணன், அப்துல்காதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் லூர்து, திருநாவுக்கரசு, விசுவ, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த 45 பேர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!