எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ். இவர் தனது அலுவலகத்தில், பணி நேரத்தில் பெண்களுடன் நெருக்கமாக பழகிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர் பெலகாவியில் இருந்தபோது இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பெண்களுடன் ராமச்சந்திர ராவ் இருப்பதை யாரோ மர்ம நபர்கள் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதில் அவர் அலுவலக அறையிலேயே, பல்வேறு பெண்களுடன், ஆபாச செயல்களில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த பரபரப்பான வீடியோ வைரலானதும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டி.ஜி.பி. அளவிலான அதிகாரி, அரசு அலுவலகத்தில் நடந்து கொண்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியபோது முதல்வர் சித்தராமையா கூறும்போது, இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கூறினார்.
இந்த சூழலில், டி.ஜி.பி. அந்தஸ்திலான மூத்த அதிகாரி ராமசந்திர ராவை கர்நாடக அரசு நேற்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளது.
வீடியோ தொடர்பாக டி.ஜி.பி. ராமச்சந்திர ராவ் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது,“நான் பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு, பெலகாவி மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோது எடுக்கப்பட்டது. அந்த பழைய வீடியோக்களை யாரோ வெளியிட்டுள்ளனர்” என்றார்.
சிறிது நேரத்தில், முதலில் கூறிய கருத்தை ராமச்சந்திர ராவ் மறுத்து, பல்டி அடித்து மீண்டும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,“இந்த வீடியோக்கள் உண்மை அல்ல. அவை போலி வீடியோக்கள். யாரோ சதி செய்து இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து எனது வக்கீலுடன் ஆலோசித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


