முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உகண்டாவில் பயங்கர மழை நிலச்சரிவுக்கு 30 பேர் பலி

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

கம்பாலா,ஆக.- 31 - உகண்டாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் நேற்றுவரை 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இப்போது காலநிலை மாறிவிட்டது மழை பெய்தால் பேய் மழையாக கொட்டுகிறது. இல்லாவிட்டால் நீண்ட காலத்திற்கு வறட்சி நிலவுகிறது மேலும் மழை பெய்த இடத்திலேயே பெய்கிறது. ஒரு சில இடங்களில் மழையே பெய்வதில்லை. இதற்கெல்லாம் காரணம் மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதால்தான். அமெரிக்காவில் ஐரீன் புயல் மழையுடன் வீசியதில் 20 பேர் பலியாகிவிட்டனர். ஏராளமான மரங்கள் சாய்ந்துவிட்டன. அதேமாதிரி ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான உகண்டாவிலும் பலத்தை மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 30 பேர் பலியாகிவிட்டனர். பலியானவர்களிள் 19 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர். தகவல் தெரிந்ததும் ராணுவத்தினர் விரைந்து வந்து மீட்டனர் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டன. உகண்டாவின் கிழக்குப்பகுதியில் உள்ள புலம்புலி மாவட்டத்தில் பெய்த மழைக்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மபோநோ என்ற கிராமத்தில் கடந்த திங்கள் அன்று இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. உகண்டாவில் மழை பெய்யும்போது அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. கடந்தாண்டு பெய்த மழைக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 300 பேர் பலியானார்கள். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் 7-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago