எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.- 6 - தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முறிந்தது. மத்திய அரசிலிருந்து விலகவும், தி.மு.க. முடிவு செய்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக கொண்ட காங்கிரஸ் உறவுக்கு தி.மு.க. ``டாட்டா'' கூறியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்உத தி.மு.க. காங்கிரசுக்கு இடையே பேச்சுவார்த்தை பலமுறை நடத்தியும், காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் அதிக சீட்டு கேட்டு வலியுறுததியதால், கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து காங்கிரசுடன் கொண்டிருந்த கூட்டணி உறவை தி.மு.க. முறித்துக்கொண்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
தி.மு.க. உயர்நிலைசெயல்திட்ட குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி மாலை 5 மணி 45 நிமிடத்திற்கு சென்னையில் உள்ள அறிவாலயத்திற்கு வந்தார். அங்கு ஏராளமான தொண்டர்கள் கூயிடிருந்தனர். அவர்கள் காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று கோஷம் எழுப்பினர்.
தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நேற்று (5.3.2011) மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் துரைமுருகன், கோ.சி.மணி, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உட்பட 26 பேர் கலந்து கொண்டனர். கூட்டம் 7 மணி 15 நிமிடம் வரை நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் உயர்நிலை மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தீர்மானமாக வெளியிட்டார்.
அதன் விபரம் வருமாறு:-
இந்தியத் திருநாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, மதச்சார்பற்ற தன்மை இவற்றைக் கட்டிக் காக்கும் வகையில் செயல்பட்டு வருகின்ற தி.மு.க. தான் மேற்கொண்டுள்ள இந்தக் கொள்கைகளின் அடிப்படையில்தான் எந்தவொரு கட்சியுடனும் அணி சேர்ந்து பாடுபட்டு பணியாற்றி வருகிறது.
இந்த நிலைப்பாட்டிலிருந்து இம்மியும் மாறாமல்தான் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடனும், மற்ற தோழமைக் கட்சிகளுடனும் நல்லுறவு கொண்டு நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் நற்பணியாற்றி வருவதோடு, ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தல்களிலும் அணி சேர்ந்து போட்டியிடும் கட்சிகளில் ஒன்றாக முன்னேற்றக் கழகம் இயங்கி வருவது நாடறிந்த உண்மையாகும்.
அந்த வகையில், 2011 ஏப்ரல் திங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் புதுவிதமான சில பிரச்சினைகள் உருவாக்கப்பட காங்கிரஸ் கட்சி காரணமாகியது என்பது தான் தி.மு.க. ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டியுமான தியாகத் திருவளக்கு சோனியா காந்தியை ஒவ்வொரு தேர்தலின் போதும் தான் சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதைப் போல இந்தச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டும், என் உடல் நிலையைக் கூடப் பொருள்படுத்தாமல் டெல்லிக்கே சென்று இரண்டு நாள் தங்கியிருந்து சந்தித்து உரையாடியபோது அவர்கள் விரும்பியவாறு முதலில் தி.மு.க. காங்கிரஸ் பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானித்தது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த வருவதற்கு கால தாமதம் ஆகிய நிலையில் தி.மு.க., பா.ம.க. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியது. மற்றக் கட்சிகளுடன் கலந்து பேசி அதுவரையில் இறுதி முடிவாக எத்தனை தொகுதிகள் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி தீர்மானிக்காமல் இருந்து அதன் பிறகே சென்னையிலே 20-2-2011 அன்று இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவிதமான முடிரும் எய்த பெறாத நிலையில் இறுதி முடிவெடுக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். அவர் முன்னிலையிலே நான் இருந்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது 57 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதென ஒப்புதல் கொடுத்தோம்.
அதுபற்றி டெல்லி சென்று மேலிடத்தைக் கலந்து கொண்டு உடனடியாக அறிவிப்பதாக குலாம்நபி ஆசாத் கூறிவிட்டுச் சென்றார். பின்னர் டெலிலியிலிருந்து பேசிய குலாம் நபி ஆசாத் 60 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்றும், அப்போது தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியுமென்றும் அறிவித்ததைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் 60 தொகுதிகள் அளிக்கவும் ஒப்புக் கொண்டு, சென்னைக்கு வந்து கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்யலாம் என்று நான் கேட்டுக் கொண்டேன்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார்கள் என்று எண்ணியிருந்த நிலையில், அங்கிருந்து தொலைபேசியில் 60 இடங்கள் போதாது, 63 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டுமென்றும், அந்தத் தொகுதிகளும் அவர்கள்தான் நிர்ணயம் செய்யப்படும் என்றும், எத்தனை இடங்கள் என்று ஒப்பந்தம் செய்யும்போதே, எந்தெந்த தொகுதிகள் என்பதும் குறிப்பிட வேண்டுமென்றும் நிபந்தனைகள் கூறப்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் இதுவரையில் நடைபெற்ற எந்தவொரு தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையிலும் இப்படியொரு நிலையை நானோ அல்லது தி.மு.க. தலைமையோ சந்தித்ததில்லை. இதைக் காணும்பொழுது, முதலில் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 48-ல் தொடங்கி, 51 என்றாகி, 53 என்றாகி, 55 என்றாகி, 57 என்றாகி, இறுதியில் 60 தொகுதிகளுக்கு தி.மு.க. ஒப்புதல் அளித்து அதன் பிறகு இது போன்று நிபந்தனைகள் 63 தொகுதிகள் வேண்டும் என்பதும், அந்தத் தொகுதிகளின் பெயர்களை பரஸ்பரம் இரண்டு கட்சிகளும் கலந்து பேசி முடிவு செய்யாமல், அவர்கள் நிச்சயிப்பதையே ஒதுக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தது. அதிர்ச்சி தரக் கூடியவைகளாக அமைந்திருப்பதைக் கண்டு தான் இதை நானோ, பேராசிரியரோ மாத்திரம் முடிவெடுத்து அறிவிப்பதாக இருந்தல் ஆகாதென கருதி, கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் விவாதித்து முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் உடன்பாட்டிற்காக தொடக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளையும், உருவாக்கப்பட்ட பிரச்சினைகளையும் எண்ணிப் பார்க்கும்போது, இரு கட்சிகளின் முன்னணி செயல்வீரர்களும், தொண்டர்களும் மன வேறுபாடின்றி நேச மனப்பான்மையோடு பணியாற்றும் நிலைக்கு, குந்தகம் ஏற்படுத்தி, தேர்தல் முடிவைப் பாதிப்பதற்கு இது போன்ற பிரச்சினைகள், செயல்பாடுகள், இழுத்தடிப்புகள் காரணமாகி விடக்கூடும் என்பதற்காக மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் இந்த போக்கு தேர்தல் உடன்பாட்டை சுமூகமாகச் செய்து கொள்ள வேண்டுமென்பதற்குப் பதிலாக இதையே சாக்காக வைத்து கழகத்தை அணியில் இருந்தே அகன்று விடச் செய்வதற்கான காரியமோ என்ற ஐயுற வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே இந்த உயர்நிலை செயல் திட்டக் குழுவில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு நாம் உள்ளாகியிருக்கிறோம் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீர்மானம்
2011-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13-ம் நாள் நடைபெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் நடத்திய தேர்தல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண முடியாமைக்கும், கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை 60 இடங்கள் என்று கேட்டு, தி.மு.க.வும் அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு தற்போஉ 63 இடங்கள் வேண்டுமென்பதும், அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பார்கள் என்பதும் வேண்டுமென்றே இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாக் காட்டுவதாக தி.மு.க. உணருவதால் இத்தகைய சூழ்நிலையில் மத்தியிலே ஆட்சியலே தி.மு.க. தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து மத்திய அரசிலே ஆட்சிப் பொறுப்பிலே இடம் பெற விரும்பாமல் தி.மு.க. தன்னை விடுவித்துக் கொண்டு, மத்திய அரசுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மட்டும் ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவினை எடுக்கலாமென இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.