முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா நிறைவுபெற்றது

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

நாகை, செப்.9 - வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவில் நேற்று இரவு பெரிய தேர் பவனி நடைபெற்றது. பின்பு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு பெருவிழா தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 29-ம் தேதி மாலை 6மணிக்கு ஆரோக்கிய மாதா சப்பர ஊர்வலம்  கடைத்தெரு, ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை வழியாக பேராலய முகப்பை வந்தடைந்தது. சப்பரத்திற்கு முன்னால் புனித கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சப்பரம் பேராலய முகப்பிற்கு வந்ததும் ஆயிரக்கனக்கான மக்கள் முன்னிலையில் புனிதக்கொடியை தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் புனிதம் செய்து வைத்தார். அப்போது மாதா வாழ்க பசலிக்கா என்ற பக்தர்களின் வாழ்த்து கோஷங்களுடன் புனிதக்கொடி ஏற்றப்பட்டது.

பின் விழாவையொட்டி நாள்தோறும் காலை 6மணி முதல் இரவு 8மணி வரை பேராலய கீழ்கோவில் மற்றும் மேற்கோவிலில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் 8 மணிக்கு பெரிய தேர் பவனி நடந்தது. பெரித்தேரில் ஆரோக்கிய மாதா சொரூபமும், பின் தொடர்ந்து 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியர், ஆரோக்கிய மாதா ஆகியோரின் தசாரூபம், கடைத்தெரு, ஆரியநாட்டுத்தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக வந்து பேராலய முகப்பை அடைந்தது. 

விழாவில் ஆயிரக்கனக்காக பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் பவனியை கண்டு ரசித்தனர்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பெரிய தேர் பவனி நடந்தது. பெரியத்தேரில் ஆரோக்கிய மாதா எழுந்தருள பெரியத்தேர் பவனி நடைபெற்றது. மேலும் புனித வளனார், மிக்கேல், சம்மன்சு, செபஸ்தியர், அந்தோனியர் சூசையப்பர், உத்திரியமாதா ஆகியோர் 6 சிறிய சப்பரங்களில் எழுந்தருளி கடைத்தெரு, ஆரியநாட்டுத்தெரு, கடற்கரைசாலை வழியாக ஊர்வலமாக வந்து பெரிய தேர் மற்றும் 6 சிறிய சப்பரங்கள் என 7 தேர் பேராலய முகப்பை வந்தடைந்தது. முன்னதாக மாலை 5.15 மணி அளவில் பேராலய கலை அரங்கில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

இதனைதொடர்ந்து நேற்று ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்