எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் - 6 - தி.மு.க.- காங்கிரஸ் உறவு பணாலாகி இருக்கிறது. உறுதியாக இருக்கிறது, சிறப்பாக இருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டு வந்த கட்டுக்கதை வெட்டவெளிச்சமாகி முடிவுரை எழுதப்பட்டு விட்டது.
அடுக்கடுக்கான ஊழல் புகாரால் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கும் தி.மு.க.விற்கு மேலும் ஒரு பேரிடியாக மத்திய அரசு ஆதரவின்றி தனித்து தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டு காலம் மைனாரிட்டி ஆட்சியாக இடதுசாரிகள், பா.ம.க. தயவு, பின்பு காங்கிரஸ் தயவுடன் காலத்தை தி.மு.க. தள்ளியபோது ``ஆட்சியில் பங்கு'' என்ற கோரிக்கையை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் ஜால்ரா எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள் காட்டியது மூலம் சமாளித்துவந்த கருணாநிதி ஸ்பெக்ட்ரம் விவகாரம் கிளம்பியபோது விவகாரம் பூதாகரமாக எழும் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த விவகாரத்தின் சூத்திரதாரியே ராகுல்காந்தி என்பதுதான் உண்மை. தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் வெளியேற வேண்டும், காங்கிரஸ் தன்னிச்சையான முடிவு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து ராகுல் காந்தி வற்புறுத்தி வந்த நிலையில் ராசா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியபோது ராசாவின் அமைச்சரவை அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது மூலம் தி.மு.க.விற்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது. பின்பு மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை மீடியாக்கள் கையில் வந்ததற்கும் காங்கிரசின் `கை' பின்னால் இருந்தது.
தொடர்ந்து தி.மு.க.- காங்கிரஸ் உள்குத்து, முட்டல், மோதல் பல்வேறு சம்பவங்களில் வெளி வந்தது. ராசாவை கைது செய்யக் கூடாது என்பதற்காக சோனியாவை சந்திக்க சென்ற கருணாநிதியை, மகன் ராகுல் வரும் வரை காக்க வைத்து பின்பு தொகுதி பற்றி ராகுலின் எண்ணப்படி 78 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர், கண்ட்ரோல் கமிட்டி என அதிர வைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
ராசாவின் கைதும் நடந்தது. அதன் பிறகு தொகுதி பங்கீட்டுக்காக காங்கிரஸ் ஐவர் குழுவை போட்டது. இதில் சிதம்பரத்திற்கு கொம்பு சீவி அனுப்பி வைத்தனர். முதல் கட்டத்தை சாதாரணமாக கடந்த தேர்தல் அடிப்படையில் தொகுதிகளை பிரித்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்த தி.மு.க. குழுவினரிடம், எடுத்தவுடனேயே 78 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, கண்ட்ரோல் கமிட்டி என்று சிதம்பரம் பேசியவுடன் ஆடிப்போன தி.மு.க. குழுவினர் தலைவரிடம் பேசி விட்டு கூறுகிறோம் என்று முடித்துக் கொண்டனர்.
இதுபற்றி தகவல் வெளியானபோது தங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சப்பை கட்டு கட்டினாலும் உள்ளே குத்து வெட்டுக்கள் நடந்து கொண்டுதான் இருந்தது. மறுபுறம் தி.மு.க. தரப்பில் உளவுத்துறை மூலம் விஜயகாந்த் தனித்து நிற்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்கினர். ஆனால் நேற்று முன்தினம் விஜயகாந்த் போயஸ் தோட்டம் வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து 41 தொகுதிகள் உடன்பாட்டில் கையெழுத்து போட்டார்.
ஆனால் தி.மு.க.- காங்கிரஸ் தரப்பில் பல முறை பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவித முன்னற்றமும் இல்லாத நிலையில் இறுதியாக காங்கிரஸ் மேலிட நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க குலாம் நபி ஆசாத்தை, சோனியா சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவருடன் கருணாநிதி தனது குடும்ப ரத, கஜ, துராதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுதும் காங்கிரஸ் வேறு வழியில்லாமல் பணிந்து வந்து விடும். அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உறுதியாகி விட்டது. அதனால் காங்கிரஸ் தன்னை நம்பித்தான் இருக்க வேண்டும் என்ற தைரியத்தில் 57 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது மற்றும் வேறு கண்டிஷன்களுக்கு ஒத்துக் கொள்ள முடியாது என்று கருணாநிதி கூறி அனுப்பினார்.
ஆனால் காங்கிரசின் எண்ணம் வேறு மாதிரியாக உள்ளதாம். ஊழலில் நாறிக் கிடக்கும் தி.மு.க. படுதோல்வியை சந்திப்பது திண்ணம். இந்த நேரத்தில் தி.மு.க.வை நெருக்கி சில முடிவெடுக்க வைக்க வேண்டும், அல்லது காங்கிரஸ் தனித்து நின்று பீகார் பாணியில் சோதனை செய்ய கூட தயார் என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்து விட்டதாக கூறப்படுகிறது.
மறுபுறம் தி.மு.க. கலைஞர் டி.வி. விவகாரத்தில் பாகஸ்தர் என்ற முறையில் வெளிநாட்டில் இருந்து வந்த 220 கோடி ரூபாய் விவகாரத்தில் சி.பி.ஐ.யின் பிடி கனிமொழியை நோக்கி இறுகுவதால் காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தால் வாய் திறக்க முடியாது. வெளியே வந்து விட்டால் காங்கிரஸ் உறவை முறித்ததால்தான் கனிமொழியை பழி வாங்குகிறார்கள் என்று கூறி தேர்தலில் அனுதாபத்தை தேடலாம் என்ற எண்ணமும் இருந்தது. எப்படி இருந்தாலும் மத்தியில் ஆட்சி அதிகார சுகத்தில் இருந்து கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் எண்ணம் காங்கிரசை கெஞ்சும் அளவுக்கு கொண்டு சென்றது. அதைத்தான் விலகல் விஷயத்தில் தி.மு.க.வின் தீர்மானத்திலும் குறிப்பிட்டுள்ளனர். பலவாறாக அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துக் கொண்டு சென்றோம். ஆனாலும் அவர்கள் எங்கள் உறவை விரும்பவில்லை என்று ஒப்பாரி வைத்துள்ளார்கள்.
மார்ச் 3-ம் தேதி குலாம் நபி ஆசாத் டெல்லி சென்ற பிறகு கருணாநிதி 4-ந் தேதி ஒரு நாள் இறுதி கெடு. 5-ந் தேதி முடிவை அறிவிப்போம் என்று முடிவெடுத்தார்.
அதுவரையிலும் காங்கிரஸ் இறங்கி வரும் என்றுதான் கருணாநிதி நினைத்திருந்தார். 5-ந் தேதி உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டும் வரையிலும் வாசல் கதவை திறந்து வைத்து கொண்டு தங்கபாலுவாவது வருவாரா என்று காத்து கிடந்தார். ஆனால் 4-ந் தேதி நள்ளிரவே காங்கிரஸ் தி.மு.க.வுடன் உறவில்லை என்ற முடிவை டெல்லியில் எடுத்தது. இதையடுத்து தங்கள் நிலையை தெரிவித்து கருணாநிதி அய்யோ பாவம் என்ற நிலையில் நள்ளிரவில் ஒரு அறிக்கையும் விட்டுபார்த்தார். மறுநாள் மதியம் வரை சிதம்பரம் வருவார், ஆசாத் வருவார் என்று காத்திருந்த கண்கள் பொய்த்துப் போனதுதான் மிச்சம். முடிவில் வேறு வழியில்லாமல் ஒரு பெரிய தீர்மானத்தை போட்டுவிட்டு விலகளை அறிவித்துள்ளனர். ஆனாலும் காங்கிரசுக்கு பிரச்சினை அடிப்படையில் ஆதரவாம். அமைச்சரவையிலிருந்து விலகலாம். எதாவது மிச்ச சொச்சம் காங்கிரஸ் அனுதாபப்பட்டு வருமா என்பதற்கு தான் இந்த வரியும். தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது என்று உயர்நிலை செயல் திட்டக்குழுவை கூட்டி அறிவித்தாலும் காங்கிரஸ், தான் பதில் எதுவும் தராமல் புறக்கணித்தது என்பதுதான் உண்மை. நேற்று மதியம் முதல் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளுடன் காத்திருந்தனர் உறவு முடிந்தவுடன் வெடிப்பதற்காக.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முறிந்ததன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பிரகாசமாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. அணி பெறப் போகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். எந்த நேரத்தில் அழகிரி இந்த தேர்தலில் அ.தி.மு.க. காணாமல் போகும் என்று சொன்னாரோ அது அவர்களுக்கே வந்து வந்து விட்டது.
தானும் கழகமும் இதுவரை இதுமாதிரியான சூழ்நிலையை சந்தித்தது இல்லையென்று தீர்மானத்தில் கருணாநிதி புலம்பியுள்ளார். உண்மைதான் இதைவிட அதிகமான அனுபவமும் இனி அவருக்கு கிட்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Jan 2026சென்னை, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அதிகார பகிர்வுக்கான நேரமிது: காங்., எம்.பி. கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனம்
05 Jan 2026சென்னை, அதிகார பகிர்வுக்கான நேரம் இது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மானிய விலையில் இ-ஸ்கூட்டர் திட்டம்: தொழிலாளர்கள் 100 பேருக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
05 Jan 2026சென்னை, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்
-
திருச்சியில் மோடி பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
05 Jan 2026சென்னை, திருச்சியில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-01-2026
05 Jan 2026 -
சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகள் விடுதலை
05 Jan 2026நேபிடாவ், சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அந்நாட்டு ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார்.
-
58-வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை
05 Jan 2026சென்னை, 58-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும்: தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்காள முதல்வர் கடிதம்
05 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூ.13.73 கோடி மதிப்பில் 155 புதிய வாகனங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
05 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்
-
திருப்பரங்குன்ற மலை தீப தூண் விவகாரம்: மேல் முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை இன்று தீர்ப்பு
05 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளிக்கிறது. நீதிபதிகள் ஜி.
-
முரளி மனோகர் ஜோஷியுடன் ராம்நாத் கோவிந்த் திடீர் சந்திப்பு
05 Jan 2026டெல்லி, பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்து பேசினர்.
-
சென்னையில் புத்தகத் திருவிழாவை ஜன 8-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
05 Jan 2026சென்னை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த 49-வது புத்தகக் கண்காட்சி, வரும்ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
-
வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்றுங்கள்: அமெரிக்காவுக்கு இடைக்கால அதிபர் ரோட்ரிகஸ் அழைப்பு
05 Jan 2026காராகஸ், வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
கிரீன்லாந்தை எடுத்து கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி
05 Jan 2026வாஷிங்டன், டென்மார்க்கின் பகுதிகளை இணைத்துக் கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது என்றும் கிரீன்லாந்தை எடுத்துக் கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் 
-
ஒரே நாளில் 2 - வது முறையாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: தங்கம் ரூ.1,280 - வெள்ளி ரூ.9, 000 அதிகரிப்பு
05 Jan 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஜன. 5) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்துள்ளது.
-
புதுச்சேரி த.வெ.க. கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இஷா சிங் டெல்லிக்கு திடீரென இடமாற்றம்
05 Jan 2026புதுச்சேரி, புதுச்சேரி த.வெ.க. கூட்டத்தில் கவனம் பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.எஸ்.பி. இஷா சிங், டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்படடுள்ளார்.
-
வெனிசுலா விவகாரம்: போப் லியோ வேண்டுகோள்
05 Jan 2026வாடிகன் சிட்டி, வெனிசுலா நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
சமுத்திர பிரதாப் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் ராஜ்நாத் சிங்
05 Jan 2026கோவா, 6,000 நாட்டிக்கல் மைல்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் திறன் கொண்ட சமுத்திர பிரதாப் கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்து
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கு இந்திய அணி முன்னேற பி.சி.சி.ஐ.க்கு கில் புதிய யோசனை
05 Jan 2026மும்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வீரர்களுக்கு 15 நாள் மு
-
தனது அரசு மீது விமர்சிப்பவர்கள் நாக்கை வெட்ட தயங்கமாட்டேன்: முதல்வர் ரேவந்த் பேச்சால் சர்ச்சை
05 Jan 2026ஐதராபாத், தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதல்வர்&nbs
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
05 Jan 2026நியூயார்க், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள
-
கர்ஜனை மொழி - என் தங்கை கனிமொழி: கனிமொழிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
05 Jan 2026சென்னை, கர்ஜனை மொழி - என் தங்கை கனிமொழி முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
-
தேர்தல் செயலியை மேம்படுத்த கருத்து கூறலாம்: பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்
05 Jan 2026சென்னை, தேர்தல் செயலியை மேம்படுத்தும் கருத்துகளை கூறலாம் என்று பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
-
முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிப்பு எதிரொலி: வங்கதேசத்தில் ஐ.பி.எல். ஒளிபரப்பிற்கு தடை
05 Jan 2026டாக்கா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை அந்நாட்டில் ஒளி
-
கனிமொழிக்கு அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து
05 Jan 2026சென்னை, கனிமொழி எம்.பி.க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.



