ஐதராபாத்தில் மேலும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் மூடப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், செப்.20 - ஐதராபாத்தில் மேலும் ஒரு சாப்ட்வேர் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. இந்த மாதத்தில் மூடப்பட்ட மூன்றாவது சாப்ட்வேர் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ம் ஆண்டு எம்.சி.ஏ. பட்டதாரியான ஷேக் உமர் அலி என்பவர் தனது நண்பர் சலீம் பாபாவுடன் இணைந்து டாஸ்க் இன்பர்மேஷன்ஸ் என்ற சாப்ட்வேர் கம்பெனியை துவக்கினார். ஐதராபாத்தில் உள்ள சிவம் ரோட்டில் இந்த சாப்ட்வேர் கம்பெனி இயங்கிவந்தது. அதன்பிறகு 2010 ம் ஆண்டு தங்களது புதிய கம்பெனிக்கு ஊழியர்களை தேர்வு செய்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் அருணோதயா காலனியில் தங்களது புதிய கிளை நிறுவனத்தையும் இவர்கள் துவக்கினர். இந்த கம்பெனியில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் பணி மட்டுமே நடைபெற்றது. மாதச் சம்பளம் ரூபாய் 8 ஆயிரம் தருவதாக கூறி ஒருவரிடம் ரூபாய் 50 ஆயிரமும் இன்னொருவரிடம் ரூபாய் ஒரு லட்சமும் வாங்கிக்கொண்டு வேலையில் சேர்த்தனர். ஆனால் அந்த ஊழியர்கள் இருவருக்கும் 4 மாதங்களாக சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் அந்த கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி புனித் என்பவரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதனால் பலன் எதுவும் ஏற்படவில்லை. பிறகு அவர்கள் மாதாபூரில் உள்ள கம்பெனியின் நிர்வாக இயக்குனர் உமர் அலியிடம் புகார் தெரிவித்தனர். அப்போது தங்களால் சம்பளம் கொடுக்க முடியாது என்று நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இரு ஊழியர்களும் நிர்வாக இயக்குனரையும், தலைமை செயல் அதிகாரியையும் அடித்து உதைத்ததோடு மேஜை, நாற்காலிகளையும் சேதப்படுத்தினர். இதையடுத்து அந்த அலுவலகத்திற்கு போலீஸ் வரவழைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய ஊழியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். தங்களுக்கு பெங்களூர் மற்றும் புனேயில் இரண்டு நிறுவனங்கள் இருப்பதாகவும் தங்களது நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிவருவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த கம்பெனியின் இயக்குனர் உமர் அலி மற்றும் பிற நிர்வாகிகள் மீது 420 மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் ஐதராபாத்தில் மூடப்பட்ட 3 வது சாப்ட்வேர் கம்பெனி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: