முக்கிய செய்திகள்

ஜெயேந்திரர் வழக்கு: விசிலென்சுக்கு ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப். 22​- சங்கர்ராமன் கொலை வழக்கு சம்பந்தமாக நதிபதி ஜெயேந்திரர் உரையாடல் பற்றி விசாரணையை அறிக்கையை 3 வாரத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று விஜிலென்ஸ் துறையினருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்த விபரம்வருமாறு:

காஞ்சீபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் மேலாளர் சங்கரராமன் 2004​ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் ஜெயேந்திரர் உள்பட பலர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.   இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்கும் 

நதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரர் பண பரிமாற்றம் தொடர்பாக பேசிய தொலைபேசி உரையாடல் கேசட் வெளியானது. இந்த உரையாடலில் பேசியது உண்மை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு விஜிலென்ஸ் பதிவாளரிடம் வக்கீல் சுந்தர்ராஜன் என்பவர் புகார் மனு கொடுத்திருந்தார். இம்மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நதிபதி சுகுணா, சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தார்.   இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுந்தரேச அய்யர், தன்னையும் இவ்வழக்கில் சேர்க்க கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு மனுதாரரின் வக்கீல் மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் நதிபதி சுகுணா சுந்தரேச அய்யரை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்தார்.   ஐகோர்ட்டு விஜிலென்ஸ் பதிவாளர் சார்பில் ஆஜரான வக்கீல் சுரேஷ்குமார் வாதாடும்போது, தொலைபேசி உரையாடல் புகார் குறித்து விசாரிக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது என்றார். அப்போது மனுதாரரின் வக்கீல் மணிகண்டன், விசாரணை அதிகாரி தனது பெயர், வயது, போன்ற விவரங்களை தெரிவிக்க மறுத்து வருகிறார் என்றார். அப்போது நதிபதி குறுக்கிட்டு அதற்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. அதை உரிய இடத்தில் முறையீடு செய்யுங்கள் என்றார். தொலைபேசி உரையாடல் புகார் குறித்த விசாரணை 2 அல்லது 3 வாரத்தில் முடிவடையும் என்று விஜிலென்ஸ் பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி சுகுணா வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளி வைத்தார். அப்போது தொலைபேசி உரையாடல் குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி விஜிலென்ஸ் பதிவாளருக்கு நதிபதி உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: