முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் போட்டியில் மாற்றம் தேவை: டிராவிட் ஆதரவு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, செப். 23 - ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரரான டெண்டுல்கர் கூறிய கருத்துக்கு முன்னாள் கேப்டன் டிராவிட் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - 

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) டெண்டுல்கர் கடிதம் எழுதினார். ஒரு இன்னிங்சுக்கு தலா 25 ஓவர் வீதம் 4 இன்னிங்ஸ் கொண்டதாக மாற்ற வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். ஆனால் அவரது இந்த யோசனையை ஐ.சி.சி. நிராகரித்தது. 

ஒரு நாள் போட்டியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று டெ ண்டுல்கர் தெரிவித்த யோசனைக்கு ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித் து உள்ளார். மும்பையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது - 

ஒரு நாள் போட்டியை இரண்டு இன்னிங்சாக பிரித்து ஆடும் முறை ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே 10 பரிட்சார்த்த முறையில் பின்பற்றப் பட்டு வருகிறது. இது மிகவும் சிறப்பாகவே உள்ளது. 

ஐ.சி.சி. எதற்காக இதை வேண்டாம் என்பதற்கான காரணம் தெரியவி ல்லை. டெண்டுல்கர் தெரிவித்த இந்த யோசனை சிறப்பானதே. இவ் வாறு டிராவிட் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்