முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் பிரீமியர் லீக் போட்டியால் வீரர்கள் திறமை பாதிப்பு

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், செப். 24 - இந்தியன் பிரீமியர் லீக் போட்டியால் இந்திய வீரர்களின் திறமை பாதி த்து விட்டது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இம் ரான் கான் குற்றம் சாட்டி இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -  இங்கிலாந்தில் சமீபத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டி ஆகிய இரண்டு தொடரிலும், படுதோல்வியைச் சந்தித் தது.  

இது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் லண்டனில் நிருபர்களைச் சந்தித்த போது, அவர்களது கேள்விக்கு பதி ல் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித் ததாவது - 

இந்திய வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் அதிகம் விளையாடியதால் அவர்களது திறமை பாதித்து விட்டது. இதனால் தான் அவர்களால் இங்கிலாந்தில் சரியாக ஆட முடியவில்லை. 

இந்திய அணி டெஸ்டில் தலைசிறந்த அணியாக இருந்தது. டெஸ்டில் ஒரு அணி சிறப்பாக ஆடினால் அந்த அணியால் ஒரு நாள் போட்டியி ல் எளிதாக வெற்றியை பெற முடியும். 

ஆனாலும், இந்திய அணி ஒரு நாள் போட்டியில் சரியாக ஆடவில் லை. வீரர்களை அதிக அளவில் ஐ.பி.எல். போட்டியில் பயன்படுத்தி அவர்கள் திறமையை வீணடிக்க செய்து விட்டார்கள். 

டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை பந்து வீச்சாளர்கள் திறமையாக செயல்பட்டால் தான் அந்த அணி வெற்றி பெற முடியும். ஐ.பி.எல். போட்டியில் பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஆடி பலவீனமான முறை யில் இருந்தனர். எனவே தான் அவர்களால் விக்கெட் எடுக்க முடிய வில்லை. 

இனிவரும் காலங்களில் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி களில் இந்திய அணி சிறப்பாக ஆடுவதற்கு வீரர்களுக்கு தேவையான ஓய்வு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்