முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ராஜன்செல்லப்பா இன்று வேட்புமனு தாக்கல்- ஏ.கே.போஸ் அறிக்கை

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.- 15 - மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வி.வி.ராஜன்செல்லப்பா இன்று அதிமுகவினருடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இது குறித்து மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழக நிரந்தர பொதுச்செயலாளர்  தமிழக முதலமைச்சர் அம்மாவால் அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மாநகராட்சி கழக மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா இன்று(26ம் தேதி) காலை 11 மணி அளவில் மதுரை தல்லாகுளம்  பெருமாள் கோவிலில் இருந்து மதுரை மாநகராட்சியின் அண்ணா மாளிகை அலுவலகம் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.   இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாநகர் மாவட்ட கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், தொகுதி கழக, பகுதி கழக, வட்ட கழக, பாக கழக நிர்வாகிகளும், இளைஞர், இளம்பெண் பாசறை நிர்வாகிகளும், கழக செயல் வீரர்களும், வீராங்கனைகளும் தவறாது  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்