முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி ஏ.டி.எம் கார்டு மூலம் பணம் அபேஸ்: 5 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்-7 - போலியான கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகளை தயாரித்து அந்த கார்டுகள் மூலம் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கியும், பொது மக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்தும் மோசடி செய்த 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 சொகுசு கார்கள், பணம் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது சென்னை அண்ணாசாலை, பம்பிங் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள கனரா வங்கி கிளையின் மேலாளர் நந்தகுமார் சென்னை காவல் ஆணையாளரிடம் கனரா வங்கி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை போலியாக தயாரித்து அதன் மூலம் சென்னையில் உள்ள பல ஏடிஎம் சென்டர்களில் பொது மக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து கடந்த இரண்டு மாதங்களாக பொது மக்களுக்கும். வங்கிக்கும் பெரும் நட்டத்தை ஏற்படுத்திய நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இம்மோசடி கும்பலை பிடிக்க சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதி, உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர் (குற்றம்) அபய் குமார் சிங், ஆலோசனையின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் ஏ.ராதிகா, மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் ஏ.ஜான்ரோஸ் தலைமையில் ஆய்வாளர்கள் ஜி.டில்லிபாபு, விஜயகுமார், உதவி ஆய்வாளர்கள் வேலு, கோபிநாத், வகிதாபேகம், சசிகலா, ரவீந்திரன், கணேசன், சபிஜான், தட்சினாமூர்த்தி, மணி, மற்றும் போலீசார், அடங்கிய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மோசடி கும்பலை பிடிக்க கண்காணித்து வந்தனர். தனிப்படையினர் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டையில் இருந்து போது கோவிலம்பாக்கம் ஏடிஎம் சென்டர் அருகில் சந்தேக்கபடும்படி 5 நபர்கள் சுற்றிதிரிந்தனர் அவர்களை விசாரித்தில் அவர்கள் பெயர் 1) உமேஷ் (எ) உமேஷ் பாலரவீந்திரன் (எ) ஷார்ட்டி (27), 2)திவ்யன் (24), 3) ராஜேந்திரன் (49), 4) உதயகுமார் (39), 5) ஜெயகுமார் (23), எனதெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்களிடம் 30க்கும் மேற்ப்பட்ட போலி ஏடிஎம் கிரெடிட் கார்டுகள் அந்த போலி ஏடிஎம், கிரெடிட், கார்டுகளை தயாரிக்க பயன்படும் ஸ்கிம்மர் மெஷின், என்கோடர் மெஷின், கம்ப்யூட்டர், லாப்டாப் ஆகியவைகளை போலீசார் கைபற்றினர். மேற்படி நபர்களிடம் இருந்து அவர்கள் போலியான ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் மூலம் எடுத்த பணத்தை கொண்டு வாங்கிய மூன்று கார்கள், விலை உயர்ந்த செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் குற்றவாளிகள் 1) உமேஷ்(எ)ஷார்ட்டி 2) ராஜேந்திரன் மற்றும் உதயகுமார் ஆகியவர்கள் ஏற்கனவே இதுபோன்று போலி ஏடிஎம், கிரெடிட் கார்டு  சம்மந்தப்பட்ட பல வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவந்தது, மேற்படி நபர்களில் 1) உமேஷ்(எ) உமேஷ் பாலரவீந்திரன்(எ) ஷார்ட்டி 2) திவ்யன் 3) ராஜேந்திரன் ஆகியவர்கள் இலங்கைத்தமிழர்கள் ஆவார்கள். மேற்படி அனைவரும் நேற்று முன்தினம் காலை கோவிலம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். ஏடிஎம் கார்டு, கிரெடிட், கார்டில் பணம் மோசடியாக எடுக்கப்பட்டது தொடர்பாக இதுவரை 64 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்