முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கீதம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில்

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக். 8 - தேசிய கீதத்தில் சிந்து அல்லது சிந்த் என்ற இரண்டு வார்த்தைகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டுமே சரிதான் என்று மத்திய அரசு மும்பை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. தேசிய கீதத்தில் சிந்த் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. அதில் தேசிய கீதத்தை பாடும் போது சிந்து என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எழுதும் போது சிந்த் என்று எழுதப்படுகிறது. இந்த இரண்டுமே ஒரே அர்த்தத்தை குறிப்பதுதான். 

தேசிய கீதம் என்பது நாட்டில் உள்ள பகுதிகளை தெரிவிக்கும் குறிப்பு அல்ல. அது எழுதப்பட்ட காலத்தில் இந்தியாவுடன் இருந்த பகுதிகளின் பெயர்கள் அதில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக 2005 ல் தேசிய கீதத்தில் சிந்த் என்ற வார்த்தையை நீக்கி விட்டு காஷ்மீர் என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டதையும், அதனை நீதிமன்றம் நிராகரித்ததையும் உள்துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!