முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிரான ரதயாத்திரை: அத்வானி தொடங்கினார்

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சிதாப்தியாரா, அக்.- 12 - ஊழலுக்கு எதிரான 38 நாள் ரதயாத்திரையை அத்வானி பீகாரில் உள்ள சிதாப்தியாராவில் நேற்று துவக்கினார்.  பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிராக ஜன் சேத்னா ரத் யாத்ரா என்ற ரத யாத்திரையை நாடு முழுவதும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். இந்த யாத்திரை 38 நாட்கள் நடக்க இருக்கிறது. கிட்டத்தட்ட 12,000 கிலோமீட்டர் தூரத்தை இந்த பயணத்தில் கடக்க அத்வானி திட்டமிட்டுள்ளார். ஒரு நாளைக்கு 300 கி.மீ. பயணம் செய்யவுள்ள அத்வானி, 23 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் இந்த பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்திக்க இருக்கிறார். இந்த ரத யாத்திரையின்போது ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள அத்வானி, ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்திய கறுப்புப்பணத்தை திரும்ப கொண்டுவருவது குறித்தும் பிரச்சனையை கிளப்பி பிரச்சாரத்தை செய்துவருகிறார்.  பீகார் மாநிலத்தின் சிதாப்தியாரா என்ற இடத்தில் அத்வானியின் இந்த ரத யாத்திரை நேற்று துவங்கியது. இதற்காக ஒரு பஸ் ரதம்போல் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல வாகன டிசைனரான திலீப் சாப்ரியா இந்த ரத வாகனத்தை வடிவமைத்துள்ளார். புனேவில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டது. அத்வானி ரத யாத்திரையை துவக்கியுள்ள இந்த சிதாப்தியாரா பிரபல சோஷலிசவாதி ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.  த்வானியின் இந்த ரத யாத்திரையை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் துவக்கிவைத்தார். நேற்று துவங்கிய இந்த ரத யாத்திரை அடுத்த மாதம் 20 ம் தேதி முடிவடைகிறது. யாத்திரை முடிவடையும் டெல்லியில் அன்றைய தினம் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க. ஏற்பாடுகளை செய்துவருகிறது. இந்த யாத்திரையின் மூலம்  தனது செல்வாக்கை உயர்த்தி அதன் மூலம் கட்சியின்  பிரதமர் வேட்பாளராக தன்னை  முன்னிறுத்த அத்வானி இத்தகைய  முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அத்வானியின் பிரதமர் வேட்பாளர் ஆசைக்கு ஆர்.எஸ்.எஸ். கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதனால் சமீபத்தில் நாக்பூர் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்த அத்வானி தான் பிரதமர் வேட்பாளர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று அறிவித்துள்ளார். அத்வானியின் ரத யாத்திரையை முதலில் குஜராத்தின் கரம்சாட் நகரில் மோடி துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் அதை அத்வானி தவிர்த்துவிட்டார். ஆனால் அத்வானியின் இந்த ரத யாத்திரைக்கு தற்போது மோடியும் தமது ஆதரவை தெரிவித்துள்ளார். யாத்திரை பற்றி குறிப்பிட்ட மோடி இந்த யாத்திரை இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த யாத்திரைக்கு பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அத்வானிக்கம், மோடிக்கும் பிரதமர் பதவி மீது ஆசை. அதற்காகத்தான் மோடி உண்ணாவிரதத்தையும், அத்வானி ரத யாத்திரையையும் மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago