முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி - அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவிஅதிமுக வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

தேனி,அக்.22 - தேனி-அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தேனி முருகேசன் 2782 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றியினை பெற்றார். தேனி-அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவிக்கு கடந்த 17-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.இத்தேர்தலில் அதிமுக சார்பாக நகராட்சி தலைவர் பதவிக்கு தேனி முருகேசன் 16,622 வாக்குகளும்,திமுக வேட்பாளர் ராம்தாஸ் 13840 வாக்குகளும்,காங்கிரஸ் தஸ்லீம் 2666 வாக்குகளும்,தே.மு.தி.க கிருஷ்ணமூர்த்தி 6138 வாக்குகளும்,பா.ம.கா காஜாமைதீன் 230 வாக்குளும்,பி.ஜே.பி.குமரேசன் 847 வாக்குகளும், விடுதலை சிறுத்தை செல்வராசு 437 வாக்குகளும் பெற்றனர்.இதில் அதிமுக வேட்பாளர்,திமுக வேட்பாளரை விட 2782 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியினை தட்டி சென்றார்.வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து பெற்று கொண்ட அதிமுக வேட்பாளர் தேனி முருகேசன் கூறியதாவது:தேர்தலில் கூறியபடி முதலில் தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதி மக்களுக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் விரைவாக கொண்டு வர பாடுபடுவேன்,பாதாள சாக்கடை திட்டத்தில் தோண்டப்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படும்,திட்ட சாலைகளை செயல்பட பாடுபடுவேன்,மின் மயானத்தை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன் ,அம்மா வாக்குறுதி அளித்த தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை விரைந்து கிடைக்க செயல்படுவேன் ,என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட கழக நிர்வாகிகள் ,கிளை செயலாளர்கள்,வார்டு செயலாளர்கள்,இளைஞர்,இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் , பொதுமக்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.தேனி-அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 33 உறுப்பினர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில் 1-வது வார்டு அதிமுக வக்கீல் கிருஷ்ணகுமார்,5-வது வார்டு அதிமுக வேட்பாளர் வீரமணி,12-வது அதிமுக வேட்பாளர் திருமதி.பாப்பா,17-வது வார்டு வி.காசிமாயன் (அதிமுக),22-வது வார்டு அதிமுக வேட்பாளர் சங்கீதா,24-வது வார்டு அதிமுக வேட்பாளர் அமுல்தாஸ்,27-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெயமணி,32-வது வார்டு அதிமுக வேட்பாளர் வைகைகருப்புஜி,33-வது வார்டு அதிமுக வேட்பாளர் அழகேசன்,ஆகிய 10 அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். திமுக வேட்பாளர் 6-வது வார்டு ராஜாங்கம்,11-வது வார்டு திமுக வேட்பாளர் சேகர்,16-வது வார்டு திமுக வேட்பாளர் காந்திமலர்,19-வது வார்டு திமுக வேட்பாளர் நாராயணபாண்டியன்,20-வது வார்டு திமுக வேட்பாளர் இந்திராகாந்தி,28-வது வார்டு திமுக வேட்பாளர் அய்யனார்பாபு, 29-வது வார்டு திமுக வேட்பாளர் ரவிக்குமார்,30-வது வார்டு சந்திரகலா ஈஸ்வரி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் 2-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சுப்புலட்சுமி,10-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் தமிழரசி,14-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் பாண்டியம்மாள்,15-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் காளீஸ்வரி,21-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சுந்தரராஜ்,தே.மு.தி.க சார்பில் 23-வது வார்டு தே.மு.தி.க வேட்பாளர் சுரேஷ்,26-வது வார்டு தே.மு.தி.க வேட்பாளர் பெருமாள் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 31-வது வார்டு இ.கம்யூ வேட்பாளர் லதா,சுயேட்சை வேட்பாளர் சார்பில் 3-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பால்பாண்டியன், 7-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் முருகன்,9-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கரிகாலன்,13-வது வார்டுசுயேட்சை வேட்பாளர் தங்கபொன்னு,18-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சண்முகசுந்தரம்,25-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஆறுமுகம்,உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி: பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அப்பு 499 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.வீரபாண்டி பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ரத்தினசபாபதி 470 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!