ஊழல் பிரச்சாரத்தை ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஏன் துவக்கவில்லை?

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

புது டெல்லி, நவ.3 - ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ள வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர். தனது ஆசிரமத்தின் தலைமையகம் அமைந்துள்ள பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஏன் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை துவக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜயசிங் கேள்வி எழுப்பி உள்ளார். நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறுகையில், ஹசாரே குழுவினர் தங்களுக்கு கடந்த 6 மாதங்களில் ரூ. 42.55 லட்சம் அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் நன்கொடையாக கிடைத்ததாகவும், அதை திருப்பிக் கொடுத்து விடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். விலாசம் தெரியாதவர்கள் அளித்த நன்கொடையை திருப்பித் தரப் போவதாக நடைமுறைக்கு ஒத்துவராத செயலை இவர்கள் அறிவித்துள்ளனர். 

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மகராஜ் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். வரும் 7 ம் தேதி முதல் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து அவர் தனது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்து சத்சங்க பிரச்சாரம் செய்யவுள்ளார். 

ஆனால் பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநிலத்தில்தான் ரவிசங்கரின் தலைமையகம் உள்ளது. அந்த மாநிலத்தில் அவர் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை துவக்காதது ஏன்? அங்குதான் ஊழலுக்கு பா.ஜ.க. முதல்வரே சிறைக்கு போயுள்ளார். ஆனாலும் அதை ரவிசங்கர் கண்டு கொள்ளாதது ஏன்? ஒரு வேளை பா.ஜ.க. மீது அவர் கொண்ட உறவுதான் காரணமோ? என்றார். 

இதற்கிடையே லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ள நிலையிலும், அரசை ஹசாரே குழு தொடர்ந்து மிரட்டுவது ஏன் என்று புரியவில்லை என்று மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகாசோனி கூறியுள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், ஹசாரே அரசை நிர்பந்திக்க தேவையே இல்லை. லோக்பால் மசோதாவை நாங்கள் நிறைவேற்றுவோம். இதற்கான பணி தொடங்கி விட்டது என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: