முக்கிய செய்திகள்

பாரத ரத்னா விருது பெற டெண்டுல்கர் தகுதியானவர்

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

மும்பை, நவ. 4 - நடிகர் அமிதாப்பச்சனை விட டெண்டுல்கரே பாரத ரத்னா விருது பெற தகுதி யானவர் என்று பிரபல இந்திய பாடகி ஆஷா போன்ஸ்லே கருத்து தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - பிரபல இந்தி பின்னணி பாடகி ஆஷா போன்ஸ்லே. 73 வயதாகும் இவர் ஆயிரக்கணக்கான இந்தி பாடல்களும், பிற மொழி பாடல்களு ம் பாடி உள்ளார். சமீபத்தில் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இட ம் பெற்று இருந்தார். 

ஆஷா போன்ஸ்லே பிரபல கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரின் தீவிர ரசி கை. அவரிடம் நிருபர்கள் பாரத ரத்னா விருதுக்கு நீங்கள் சிபாரிசு செய்வதாக இருந்தால், அமிதாப் பச்சனை சொல்வீர்களா? டெண்டுல் கரை சொல்வீர்களா? என்று இக்கட்டான கேள்வி கேட்டனர். 

ஆனால் ஆஷா போன்ஸ்லே, அதற்கு பதில் அளிக்கையில், பாரத ரத் னா விருது பெற அமிதாப் பச்சனை விட டெண்டுல்கரே தகுதியானவ ர். அவருக்குத்தான் அந்த விருதுக்கான தகுதி இருக்கிறது என்றார். 

ஆஷாவின் சகோதரியும் பிரபல பாடகியுமான லதா மங்கேஷ்கர், இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு தான் பாரத ரத்னா விருது வழங்க வே ண்டும் என்று கூறியிருந்தார். 

உங்கள் மூத்த சகோதரி இப்படி கூறியிருக்கிறாரே என்று ஆஷா போ ன்ஸ்லேவிடம் கேட்ட போது, இது  பற்றி நான் கருத்து கூற முடியா து. இது அவரது விருப்பம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: