எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சண்டிகார், நவ.11- குருநானக் ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாப் , அரியானா மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
சீக்கிய மத குரு குருநானக் பாகிஸ்தானில் உள்ள லாகூர் மாகாணத்தில் நான்கானா சாஹிப் என்ற இடத்தில் 1469 ம் ஆண்டு பிறந்தார்.
இவர் பிறந்த தினம்தான் குரு நானக் ஜெயந்தியாக சீக்கிய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் பலரும் நேற்று நான்கானா சாஹிப்பில் உள்ள குருநானக் பிறந்த நினைவிடத்தில் கூடி பிரார்த்தனை செய்தனர்.
பஞ்சாப் மற்றும் அரியானாவில் இந்த ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், அரியானா கவர்னர் ஜெகனாத் பகாடியா, முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து செய்திகளை வழங்கியுள்ளனர்.
சீக்கியர்களின் புனித தலங்களில் உள்ள குளங்களில் சீக்கியர்கள் புனித நீராடி பிரார்த்தனை செய்தனர்.
அலங்காரம் செய்யப்பட்டிருந்த சீக்கியர்களின் பொற்கோவிலில் பக்தர்கள் பிரார்த்தனைகளை செய்தனர்.
நாடு முழுவதும் உள்ள குருத்துவாராக்களில் குரு நானக் ஜெயந்தி சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


