எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, நவ.- 12 - மழை வெள்ளத்தால் உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை விபரம் வருமாறு:- தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், தத்தனேரி, பாக்கியநாதபுரத்தைத் சேர்ந்த அன்புராஜ் என்பவரின் மகன் ஜேசுதாஸ் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும், 10.11.2011 அன்று விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம், நொச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் அருள், காஞ்சிபுரம் மாவட்டம், கொடுமலைவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் மகன் ஜெயக்குமார், திருக்கழுக்குன்றம் வட்டம், இரும்புலிசேரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் நடராஜ் ஆகியோர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், வாத்தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் மருதமுத்து சுவர் இடிந்து விழுந்ததாலும், திருவாரூர் மாவட்டம், நீnullடாமங்கலம் வட்டம், மஞ்சனவாடி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சநாதன் என்பவரின் மகன் சாமிநாதன் மின்சாரம் தாக்கியதாலும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயருற்றேன். பல்வேறு விபத்துகளில் மரணமடைந்த இந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அறிக்கையலி கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |