முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ. 24-25 அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாடு

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ. 16 -  டெல்லியில் வரும் நவ.24,25 ஆகிய தேதிகளில் இளைஞர் மாநாடு நடக்க உள்ளதாகவும், அதில் தமிழகத்திலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த யுவராஜ் கூறியதாவது:-

தமிழக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஞானதேசிகனுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் நீக்கப்பட்ட பல்வேறு தரப்பினரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவோம். கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கலந்து நல்லதொரு முடிவை எடுத்து மீண்டும் அணுஉலை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் உயர்தர மதுபான பார்களை அரசு வருமானம் என்று பாராமல் மக்கள் நலனையும் கருத்தில் கொள்ளும் வகையில் தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். 

வரும் நவ.24, 25 தேதிகளில் டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்தியா முழுவதிலுமிருந்து 20 மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்திலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

இவ்வாறு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்