முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேள்வித்தாள் அவுட்: 3 அதிகாரிகளுக்கு ஆயுள்

வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

போர்ட்பிளேயர், நவ.18 - அந்தமானில் சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் அவுட்டான வழக்கில் பள்ளி முதல்வர் உட்பட 3 அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பாடத்திட்டத்தின் படி செயல்படும் சி.பி.எஸ்.ஐ. பள்ளிகளில் பொதுத்தேர்வு நடந்தது. அந்தமானில் 9 ம் வகுப்பு அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களுக்கான கேள்வித் தாள்கள் அவுட்டானது. போர்ட்பிளேயரில் உள்ள சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளி முதல்வர் அரசு என்ஜீனியர், வனத்துறை ரேஞ்சர், போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகிய 5 பேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்தது. அவர்கள் கேள்வித்தாள்களை திருடி பல லட்ச ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். அவர்கள் விசாரணை நடத்தி அந்த 5 பேர் மீதும் போலீசில்புகார் செய்தனர். அந்தமான் செசன்ஸ் கோர்ட் வழக்கை விசாரித்து பள்ளி முதல்வர், என்ஜீனியர், வனத்துறை ரேஞ்சர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என விடுதலை செய்யப்பட்டார். ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பொது ஊழியராக இருந்து கொண்டு நம்பிக்கை துரோகம் செய்து கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டதால் அந்த நால்வருக்கும் மிக கடுமையானதண்டனை வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். கோர்ட் தீர்ப்பையடுத்து அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கேள்வித்தாள் அவுட்டான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்