முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை துறைமுகத்தை எண்ணூருக்கு மாற்ற உத்தரவு

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - கடந்த 2002-ம் ஆண்டு முதல் சென்னை துறைமுகத்தில், நிலக்கரி, இரும்பு தாதுப்பொருள்களால் சென்னையுள்ள பிரதான இடங்கள் மாசுயடைகிறது என்ற வழக்கு தொடர்ந்து இருந்தது வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் சென்னை ஐகோர்ட்டில் அக்டோபர் 1-ம் தேதி முதல் சென்னை துறைமுகத்தில் உள்ள அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயல்பாடுகள் எண்ணூர் துறைமுகத்திற்கு மாற்றவேண்டும் என்ற உத்தரவு சென்னை ஐகோர்ட் பிறப்பித்தது.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை துறைமுக மேலாளர் மனு தாக்கல் செய்தார். அந்த மறுபரிசீலனை மனுவில் தன்னையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டு மனு தாக்கல் செய்தது. இவ்விரு மனுக்களும் நேற்று நீதிபதிகள் தர்மராவ் மற்றும் நீதிபதி சுப்பையா கொண்ட இரண்டாம் டிவிஷன் பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஏற்கனவே மனுக்களை விசாரித்த போது எண்ணூர் துறைமுகம் சார்பில் செப்டம்பர் மாதம் கடைசியில் பணிகள் முடிந்து தயாராகிவிடும் என்று மனு தாக்கல் செய்திருந்தது. அதுவும் கோர்ட் பதிவு செய்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த வழக்கு 2002-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பொழுதெல்லாம் நன்றாக தூங்கிவிட்டு மீண்டும் அறியாதவர்கள் போல் இருந்துவிட்டு இப்பொழுது தன்னையும் வழக்கில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அது மட்டும் இல்லாமல் தற்போது மறு பரிசீலனை மனுவில் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் மற்றும் வேறு வேறு காரணங்களை காட்டி எண்ணூர் துறைமுகத்திற்கு மாற்ற கால அவகாசம் கேட்பது ஏற்க முடியாது எண்ணூர் துறைமுகத்திற்கு தாதுக்களில் செயல்பாடுகளை மாற்ற வேண்டும் என்று கூறிய தீர்ப்பில் எல்லா விவரங்களையும் அலசி ஆராய்ந்து தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். ஆக மறு பரிசீலனை என்ற பெயரில் மறுபடியும் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க கோருவது சட்டத்திற்கு புரம்பானது என்று கூறி அவ்விரு மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!