முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. ஆட்சியில் தொலைத்தொடர்பு துறையில் நஷ்டம்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, நவ.25 - உரிம கட்டண முறைக்கு பதிலாக வருவாய் பங்கீட்டு முறையை பா.ஜ.க. கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியதால் கடந்த 1999 ல் தொலைத் தொடர்பு துறையில் ரூ. 43, 523 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா தெரிவித்தார். மக்களவையில் பேசிய மிலிந்த் தியோரா கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட உரிம கட்டண முறைக்கு பதிலாக வருவாய் பங்கீட்டு முறையை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 1999 ல் அறிமுகப்படுத்தியது. நிர்ணயிக்கப்பட்ட உரிம கட்டண முறையையே கையாண்டிருந்தால் அரசுக்கு ரூ. 58,354.62 கோடி வருவாய் கிடைத்திருக்கும். ஆனால் புதிய தொலைத் தொடர்பு கொள்கையால் அரசுக்கு ரூ. 12,830.70 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 43,523.92 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது என்றார். 

இது தொடர்பாக கடந்த 2000 ம் ஆண்டில் வெளியான சி.ஏ.ஜி. அறிக்கையில், அரசுக்கு செலுத்த வேண்டிய உரிம கட்டணத்தை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முறையாக செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. உரிமம் தொடர்பான ஒப்பந்தங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து மீறி வந்த போதிலும் அந்த நிறுவனங்களுக்கு சலுகை மேல் சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago