முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடியில்:9புதிய வழிதடங்களில் பேருந்து ஓ.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

போடி டிச.- 10 - தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் நகர் பேருந்து மற்றும் புறநகர் பேருந்து உள்ளிட்ட 9 புதிய வழிதடங்களுக்கு செல்லும் பேருந்தை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.போடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் கிராமங்கள் தோறும் பேருந்துகள் இயக்க வேண்டுமென்று தமிழகஅரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து பரிசீலனை செய்த அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கிராமங்கள் தோறும் பேருந்துகள் இயக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். இதன் பேரில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் நகர் பேருந்து மற்றும் புறநகர் பேருந்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இதில் திண்டுக்கல் கோட்ட பொதுமேலாளர் வழிதடங்கள் குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இதன் பேரில் போடியில் இருந்து கோடாங்கிபட்டி, புதிைப்புரம் வழியாக தேனி வரையிலும், போடியில் இருந்து சில்லமரத்துப்பட்டி, அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன் பட்டி வழியாக சின்னமனுனூர் வரையிலும், போடியில் இருந்து கோடாங்கிபட்டி, புதிைப்புரம், க.விலக்கு வழியாக ஆண்டிபட்டி வரையிலும், நகர் பேருந்துகள் இயக்கவும்  திட்டமிட்டது. மேலும் குப்பிநாயக்கன்பட்டியில் இருந்து கொடுவிலார்பட்டி, அரண்மணைபுதூர், தேனி வழியாக மதுரை வரை செல்லும் புறநகர் பேருந்தை இயக்கவும் திட்டமிடப்பட்டது. இதனால் கிராமபுற மக்கள் பயனடையும் வகையில் 9 புதிய வழிதடங்களுக்கான பேருந்துகள் துவக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து 9 வழிதடங்களுக்கான பேருந்துகளை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் பழனிசாமி, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பால்பாண்டி, போடி பணிமனை கிளை மேலாளர் அருளானந்தம், கோட்ட மேலாளர் வெங்கடாசலம், வட்டாட்சியர் நாகமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்