முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமல்லபுரத்தில் நாட்டிய விழா இன்று தொடங்கிறது

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,டிச,27 - மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடக்கும் இந்திய நாட்டிய விழா இன்று தொடங்கிறது. உலக யுனெஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்களின் வரிசையில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் 1992 - ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணையின் படி நாட்டிய விழா முதன் முதலாக தொடங்கப்பட்டு ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நாட்டிய விழா ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் இறுதி வரை நடைபெறும். இந்த நாட்டிய விழாவினை கண்டுகளிக்க உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்ற கலை ரசிகர்களின் எண்ணிக்கை (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்) ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் இடைவெளியின்றி ஒரு மாத காலம் நடத்தப்பெறுவதால் வெளிநாட்டுப் பயணிகளிடம் அதிக வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரத்தில் 31 நாட்கள் நடைபெறும் இந்திய நாட்டிய விழா இன்று மாலை 6.00 மணிக்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா தலைமையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா முன்னிலையில், பள்ளிக் கல்வி, விளையாட்டுகள், இளைஞர் நலத்துறை, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்து விழாப் பேரூரையாற்ற உள்ளார். இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆண்டின் நாட்டிய விழாவில் தொடக்க நிகழ்ச்சியாக ஸ்ரீ லெட்சுமி ராமசாமி அவரின் தலைமையில் ஸ்ரீ முத்ராலயா நாட்டியக் குழுவின் பரத நாட்டிய நடன நிகழ்ச்சியும். தொடர்ந்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் தேனிசைத் தென்றல் தேவா, தமிழ்நாடு கலாச்சாரம் என்ற தலைப்பில் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

இவ்வாண்டு முதல் நாட்டிய விழாவினை அனைவரும் கண்டு களிப்பதற்கு வசதியாக நுழைவுக் கட்டணம் கிடையாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்