முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினாவில் பொதுக்கூட்டம்: பாரதிராஜா - சேரன் மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 27 - முல்லை பெரியாறு அணை பிரச்சினை சம்பந்தமாக மவுன ஊர்வலம் நடத்த உள்ளதாக அனுமதி வாங்கி மெரினா கடற்கரையில் பொது கூட்டம் நடத்தியதாக வைகோ - பரதிராஜா- சேரன் மற்றும் மே-17 இயக்கத்தினர் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முல்லை பெறியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடுகளை கண்டித்து மே.17 இயக்கத்தினரும் தமிழ் திரைப்பட இயக்குநர் மற்றும் தமிழ் உணர்வாளர்களும் டிச.25 அன்று மெரினா கடற்கரையில் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தினர் பின்னர் போலீசின் அனுமதியை மீறி ஊர்வலம் நடத்தினர். களங்கரை விளக்கம் அருகே பொதுக்கூட்டமும் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் கலந்து கொண்டார்.  ஆர்ப்பாட்டம் நடநத்தியவர்கள் போலீஸ் தடையை மீறி ஊர்வலம் சென்றதற்காக போலீசார் வைகோ, திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, சேரன், தங்கர்பச்சான், கவிஞர் தாமரை மற்றும் ``மே.17 இயக்கத்தினர்'' உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் மீது 143 (சட்ட விரோதமாக கூடுதல்) , 188 (காவல் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony