முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிலானிக்கு பதில் அஷன்? பாகிஸ்தானுக்கு புதிய பிரதமர்

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், டிச.30 - பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் அய்தாஸ் அஷன் நியமிக்கப்படலாம் என்று அந்நாட்டு அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் இதை நிரூபிக்கும் வகையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அதிபர் ஜர்தாரி, அஷனுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது தனக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் தனது மகன் பிலாவலுக்கு வழி காட்டுமாறு அஷனை அவர் கேட்டுக் கொண்டாராம். பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த அஷன், மிகவும் பிரபலமான வழக்கறிஞர். பெனாசிர் பூட்டோ நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற பேரணியில் அஷனை பேசுமாறு ஜர்தாரி அழைத்தது இத்தகைய யூகங்களை மெய்ப்பிப்பது போல் இருந்ததாம். இதனால் கட்சியில் அவருக்கு முக்கிய பதவி அளிக்கப்படலாம் என்றும் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். கிலானிக்கு மாற்றாக அஷனை நியமிப்பது தொடர்பாக தீவிரமாக பரிசீலிப்பதாக அதிபர் ஜர்தாரிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் பிரதமர் பதவி குறித்து கருத்து எதையும் அஷன் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இடைத் தேர்தலில் தமக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் அதன் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளதையும் அஷன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்