முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் ரூ.3.2 லட்சம் பறிமுதல்

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், மார்ச்.15 - திருமங்கலம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அதிரடியாக வாகனச்சோதனை நடத்தப்படுகிறது.  இந்த நிலையில் திருமங்கலம் டி.எஸ்.பி. முருகேசன் உத்தரவின் பேரில் கப்பலூர் ரிங் ரோடு பாலத்தில் போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து வந்த சிங்காரவேல் பாண்டியன், சிவக்குமார் ஆகியோர் முறையான ஆவணங்கள் இன்றி ரூ. 2.25 லட்சம் வைத்திருந்தனர். இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் கோவில்பட்டியை சேர்ந்த ஜோதி அருணாச்சலம், சோமசுந்தரம் ஆகியோரது காரை சோதனை செய்தபோது அதில் ரூ.95 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மட்டும் வாகனச்சோதனையில் கிடைத்த ரூ.3.2 லட்சத்தை வருவாய் ஆய்வாளர் குணசேகரிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்