முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞரின் குடும்பத்திற்கு உமர் நேரில் ஆறுதல்

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், ஜன.- 4 - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு  படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது பலியான இளைஞரின் குடும்பத்திற்கு காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா நேரில் ஆறுதல் தெரிவித்தார்.  கடந்த திங்கட்கிழமையன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள போனியார் என்ற இடத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துரதிருஷ்டவசமாக அல்டாப் அஹமது என்ற  இளைஞர் இந்த துப்பாக்கிச் சூட்டில் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். மின்வெட்டைக் கண்டித்து இளைஞர்கள் போனியார் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோதுதான் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. ஜம்மு நகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் போனியார் சென்ற உமர் அப்துல்லா அங்கு அல்டாப் அஹமது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அத்துமீறிய செயல் என்றும், இது மன்னிக்க முடியாத காரியம் என்றும் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் இதுவரை 120 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இப்போதுதான் முதல் முறையாக பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட ஒரு இளைஞரின் குடும்பத்தை நேரில் சென்று காஷ்மீர் முதல்வர் ஆறுதல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்டாப் அஹமதுவின் மரணம் பரிதாபத்திற்கு உரியது. அதிர்ச்சி அளிக்கக் கூடியது என்றும் அப்துல்லா கூறினார். இந்த இளைஞரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிறகு அப்துல்லா தனது இணைய தளத்தில் ஒரு இரங்கல் செய்தியையும் வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு படையினரால் ஏற்கனவே பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இது தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவமாக இருந்துவருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அல்டாப் அஹமது துப்பாக்கிச் சூட்டில் பலியானது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலியான அஹமதுவின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் உமர் அப்துல்லா உறுதி அளித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்