முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத் தேர்தலுக்கு வாய்ப்பே இல்லையாம்: காங்கிரஸ்-மணீஷ்திவாரி

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. - 4 - இந்த ஆண்டு இடைத் தேர்தல் நடைபெறக் கூடும் என்ற பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ்திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  லோக்பால் மசோதா விவகாரத்தில் எங்களுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இருவருக்கும் பொதுவான அம்சங்களை நாங்கள் கண்டறிவோம். தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்துவோம். அதன் மூலம் பொதுவான அணுகுமுறைகளை காண்போம். அதனால் லோக்பால் மசோதா தொடர்பான மாநிலங்களவையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையை நீக்க முடியவில்லை. முன்னதாக லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேறியது. அதன் நிறைவேற்றத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் உதவி செய்தது.  ஆனால் மாநிலங்களவைக்கு மசோதா வந்த போது அந்த கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டது. மாநிலங்களவையில் லோக்பால் மசோதா நிறைவேறாததற்கு பா.ஜ.க.வே முக்கிய காரணமாகும். 2 ஜி முதல் லோக்பால் வரை அந்த கட்சி எதிர்மறை அரசியல் செய்து வருகிறது. இதனால் நாட்டில் முதலீடு குறைந்து வளர்ச்சி குன்றும். காங்கிரஸ் கட்சி தனது சொந்த பலத்தை நம்பி வரவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்களை சந்திக்கவுள்ளது என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்