சென்னை ஓபன்: டேவிஸ் மாலிஸ் அதிர்ச்சிதோல்வி

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன. - 4 - சென்னையில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் நே ற்று நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் டேவிஸ் மா லிஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான செ ன்னை ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக தமிழகத்தி ன் தலைநகரில் அமோகமாக நடைபெற்று வருகிறது.  இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற சர்வதேச வீரர் களுடன் இந்திய வீரர்களும் பங்கேற்று வருகின்றனர். இந்தப் போட்டி யை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் பெல்ஜியம் வீரர்கள் டேவிஸ் மாலிசும், டேவிட் கோபினும் மோதினர். இதில் டேவிட் கோபின் சிறப்பாக ஆடி நேர் செட் கணக்கில், வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக நடந்த முதல் நாள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ரு மேனிய வீரர் விக்டர் ஹானெஸ்குவும், அமெரிக்க வீரர் சாம் கொர்ரி யும் மோதினர். இதில் விக்டர் சிறப்பாக ஆடி 6- 3, 6- 4  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் வீரர்களான டேவிஸ் மாலிசு ம், டேவிட் கோபினும் மோதினர். இதில் முன்னாள் சாம்பியனான மாலிஸ் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் மாலிஸ் முதல் செட்டை 6- 4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி னார். பின்பு நடந்த 2-வது செட்டில் கோபின் கடும் நெருக்கடி கொடுத் தார். இதனால் மாலிஸ் திணறினார். கோபின் தொடர்ந்து சிறப்பாக ஆடி, 6 - 2 என்ற கணக்கில் செட்டை தனது வசமாக்கினார். இதனால் ஆட்டம் 1 - 1 என்ற கணக்கில் சமனா கியது. இந்த செட்டில் மாலிஸ் செய்த தவறுகளும் அவருக்கு எதிராக மாறின. 2-வது செட்டை இழந்ததால் மாலிஸ் 3-வது செட்டில் கவனமாக ஆடி னார். இருந்த பேதிலும் கோபின் கவனமாகவும், புத்திசாதுர்ய மாகவு ம் ஆடி செட்டை வென்று 2- வது சுற்றுக்குள் நுழைந்தார். 

3-வது செட்டை கோபின் 6- 3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இது மாலிசிற்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த ஆட்டம் சுமார் 1 மணி மற்றும் 53 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 

பெல்ஜியம் வீரரான டேவிஸ் மாலிஸ் 2007 -ம் ஆண்டு சென்னை ஓப ன் பட்டம் வென்று இருக்கிறார். தவிர, கடந்த ஆண்டு இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்து ரன்னர்ஸ் அப் பட்டம் வென்றவராவார். இந்த ஆண்டு அவர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தது அவரை அதிர்ச் சிக்கு உள்ளாக்கியது. 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: