முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்க வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன. 10 - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லக்ஷ்மணை நீக்கி விட்டு அவரு க்கு பதிலாக ரோகித் சர்மாரை சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் ஆஸ்திரேலி யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே 2 டெ ஸ்ட்  போட்டிகல் முடிவடைந்து விட்டன. 

முன்னதாக முடிவடைந்த 2 டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இந்த டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெ ற்று உள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. 

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே யான 3-வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் வரும் 13 -ம் தேதி துவங்க இருக்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரப் பயிற்சியுடன் ஆயத்த மாகி வருகின்றன. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான லக்ஷ்மண் மோசமாக ஆடி வருகிறார். எனவே அவரது ஆட்டம் குறித்து கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. 

பெர்த் நகரில் அடுத்த வாரம் துவங்க இருக்கும் டெஸ்டில் மிடில் ஆர் டர் பேட்ஸ்மேன் லக்ஷ்மணை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக ரோ கித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்க ள் வலியுறத்தி உள்ளனர். இதன் விபரம் வருமாறு - 

கபில் தேவ் (முன்னாள் கேப்டன்) - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் லக்ஷ்மண் மோசமாக ஆடி வருகிறார். எனவே அவ ரை அணியில் இருந்து நீக்கி விட்டு ரோகித் சர்மாவை அணியில் சே ர்க்க வேண்டும். 

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் - இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் லக்ஷ்மணை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். விராட்கோக்லிக்கு மேலும் வாய்ப்பு அளிக்க வேண்டும். 

கிரண் மோரே (முன்னாள் விக்கெட் கீப்பர்) - இந்தத் தொடரில் டெ ண்டுல்கர் நன்கு ஆடி வருகிறார். டிராவிட்டும் போராடி வருகிறார். ஆனால் லக்ஷ்மண் ஆட்டம் மோசமாக உள்ளது. அவரை நீக்க விட்டு ரோகித் சர்மாவை சேர்க்க வேண்டும். 2 டெஸ்டை ரைத்து கோக்லியி ன் ஆட்டத்தை நிர்ணயிக்க கூடாது. அவருக்கு மேலும் வாய்ப்பு அளி க்க வேண்டும். 

வி சாஸ்திரி (முன்னாள் ஆல்ரவுண்டர்) - ஆஸ்திரேலிய மைதானங்கள் வேகப் பந்து வீச்சிற்கு ஏதுவானவை. இதில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய வீரர்கலால் உணரமுடியவில்லை. லக்ஷ்மண் ஆட்டம் திருப்தி அளிக்க வில்லை. எனவே பெர்த் டெஸ்டில் அவருக் கு பதிலாக ரோகித் சச்மாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்