வெல்லும் திறனை இந்திய அணி இழந்து விட்டதோ? கங்குலி

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி,ஜன. 13 - வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி வெல்லும் திறனை இழந்து விட்டதோ என்ற ஐயம் தோன்றி உள்ளதாக கங்குலி கூறியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறது. அங்கு 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றது. இதனால் இந்திய அணி விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. முன்னாள் கேப்டன் கங்குலியும் இது குறித்து விமர்சித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிறப்பாக இருந்த இந்திய அணி, வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து 6 வது முறையாக தோற்றுள்ளது. இதில் வீரர்களின் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்புதான் அதிகம்.  நமது வீரர்களுக்கு வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற மன உறுதி இருக்க வேண்டும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப தொடக்க வீரர்கள் சரியாக ஆடாததால் மற்ற வீரர்களும் ஆட முடியாமல் போய் விடுகிறது. ஆகவே இந்திய வீரர்கள் அனைவரும் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: