முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்புறவு பணிக்காக வண்டிகள்: சாமி எம்.எல்.ஏ. வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

மேலூர்,ஜன.13 - மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு துப்புறவு பணிக்காக 15 மூன்று சக்கர வண்டியினை ஆர்.சாமி எம்.எல்.ஏ.துப்புறவு ஊழியர்களிடம் வழங்கினார். வண்டிவழங்குவதற்கு முன்பு நகர்மக்கள் பயன்பெறும் வகையில் படித்துவிட்டு வேலையில்லாத ஆண், பெண் இருபாலருக்கும் அரசு நிதியுதவியுடன் கூடிய கம்யூட்டர் கல்வி பயின்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கினார். 

இந்நிகழ்ச்சிகளின் போது நகராட்சி சேர்மன் செ.சரவணன், கமிஷனர் பாஸ்கரசேதுபதி, துணைதலைவர் மெஹராஜ்பீபி, மேலூர் யூனியன் சேர்மன் செல்வராஜ், கொட்டம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிசெழியன், ஏ.வள்ளாலம்பட்டி பேரூராட்சி சேர்மன் உமாபதி, மாவட்ட கவுன்சிலர்கள் அம்பலம்,ராகவன், யூனியன்  துணைசேர்மன் கோட்டை முருகன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆர்.கே.சந்திரன், பரமசிவம், ராஜேஷ், சரவணகுமார்.  ராஜி, அன்புகரசு அய்யப்பன், பாண்டித்துரை, சோனைமுத்து மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் சோமாசி, கண்ணன், சுக்காம்பட்டி ரகு, நகர் நிர்வாகிகள் சாகுல்ஹமீது, சென்னகரம்பட்டி எஸ்.எஸ்.துரை, கமல், ஹயஸ்முகமது, அண்ணாதொழிற்சங்க செல்வராஜ். சினிவாசன், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் போது சாமி எம்.எல்.ஏ. பேசியதாவது; 

தமிழக முதல்வர் நமக்கு பல நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றார். தற்போது மேலூர் நகராட்சியின் பணிகள் எனக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது. பொதுமக்கள் பலரும் என்னிடம் நேரிலே அல்லது அவர்களுக்குள்ளே உள்ளாட்சி தேர்தலில் மேலூர் நகராட்சி தலைவராக வெற்றி பெற்ற செ.சரவணன் நகர் மக்களுக்காக சிறப்பாக அவரது பணியினை செய்து வருகிறார்.  நகரே வளர்ச்சி பாதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார். அதனை தொடர்ந்து பேசிய செ.சரவணன் தமிழக முதல்வர் மற்றும் மேலூர் எம்.எல்.ஏ. ஆகியோரின் உதவியுடன் மேலூர் நகர் மக்களுக்கு சிறப்பாக தனது பணியினை செய்து வருகிறேன். தற்போது 15 வண்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 12 வண்டிகள் வரஉள்ளது. குப்பைஅள்ளுவதற்காக வேன், டிராக்டர் மற்றும் குடிநீர் தொட்டியுடன் கூடிய லாரி ஆகியவை புதிதாக வாங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்