சபரிமலையில் நாளை மகரஜோதி வழிபாடு

சனிக்கிழமை, 14 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சபரிமலை, ஜன. 14 - சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு வரும் 15 ம் தேதி மகரஜோதி வழிபாடு நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோடியாக நடைபெறும் விழாவான எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் கோலாகலமாக நடைபெற்றது. எருமேலி தர்மசாஸ்தாவுக்கு ஐயப்ப பக்தர்கள் நடத்தும் பேட்டை துள்ளல் விழா மிக பிரபலமானது. சபரிமலை மகரஜோதிக்கு இரு நாள் முன்பாக ஐயப்பனின் தாய்வழி பக்தர்களாக அழைக்கப்படும் அம்பலப்புழா பக்தர்களும், ஐயப்பனின் தந்தை வழி பக்தர்களாக அழைக்கப்படும் ஆலங்காடு பக்தர்களும் நடத்தும் பேட்டை துள்ளும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. 

அம்பலப்புழா பக்தர்கள் நெற்றிப்பட்டம் கட்டிய யானைகளுடன் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஐயப்பன் விக்ரகங்களுடன் எருமேலி பேடேடை சாஸ்தா அம்பலத்தில் காத்திருந்தனர். வானில் கருடன் வட்டமிட துவங்கியும் அம்பலப்புழா பக்தர்கள் கோஷமிட்டு பேட்டை துள்ளி எருமேலி தர்மசாஸ்தாவுக்கு நேர்த்தி செலுத்தி இங்குள்ள மணிமாலா நதியில் நீராடி பெருவழி பாதை வழியாக சபரிமலைக்கு புறப்பட்டனர். 

ஐயப்பனின் தந்தை வழி சொந்தங்களாக அழைக்கப்படும் ஆலங்காடு பக்தர்கள் மாலையில் பேட்டை துள்ள நெற்றிப்பட்டம் கட்டிய யானை மீது ஐயப்பனின் விக்ரகம் அமர்ந்த நிலையில் காத்திருந்தனர். வானில் நட்சத்திரம் உதிக்கவும் பேட்டை துள்ளி தர்மசாஸ்தாவுக்கு நேர்த்தி செலுத்தினர். பாரம்பரியமாக நடைபெறும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உடல் முழுவதும் வண்ணப் பொடிகள் பூசி அலங்கரித்து பேட்டை துள்ளி நேர்த்தி செலுத்தினர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: